பூலித்தேவர் ஜெயந்தி விழா... விடுதலைப் போரை துவங்கிய மாமன்னர்... டிடிவி தினகரன் பதிவு!!
சென்னை: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதல் குரலை எழுப்பி விடுதலைப்போரினைத் தொடங்கிய மாமன்னர் பூலித்தேவர் அவர்களின் 305 வது ஜெயந்தி விழா இன்று என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், ''எதிரிகளை மிரள வைக்கும் தமது போர்த்திறனால் ஆங்கிலேய படைகளைத் திணறடித்து, இறுதி மூச்சு வரை நாட்டுக்காகப் போரிட்ட அந்த மாவீரருக்கு வீர வணக்கங்கள்.

தென்பாண்டிச்சீமையின் நெற்கட்டான்செவலில் இருந்து இந்த தேசத்திற்குச் சுதந்திர வேட்கை எனும் சுடரொளியை ஏற்றிய பூலித்தேவரின் தியாகத்தைப் போற்றி வணங்கிடுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்ற முதல் குரலை உயர்த்தியவர். 1751 ஆம் ஆண்டிலேயே இவர் இந்த வீர முழக்கத்தை எழுப்பி இருந்தார். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்திருந்தவர் என்று கூறப்படுவது உண்டு. புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் விருப்பம் கொண்டுள்ளார். இதனால் இவருக்கு பூலித்தேவன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவது உண்டு. வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.












Click it and Unblock the Notifications