சல்லி சல்லியா நொறுங்கிய ‘தாமரை’ கணக்கு! எடப்பாடியுடன் சேர முடியாது! ஃபர்னிச்சரை போட்டுடைத்த டிடிவி!
சென்னை : தற்போது தமிழகத்தில் அசுர பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் சேர வேண்டும் என பாஜக தலைமை விரும்பும் நிலையில் எடப்பாடியுடன் சேர முடியாது என அதிரடி காட்டி இருக்கிறார் டிடிவி தினகரன்
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டுமென பாஜக தலைமை விரும்பும் நிலையில், தனக்கான முக்கியவத்துவம் குறைந்து விடுமென்பதாக எடப்பாடி பழனிசாமி முற்றாக மறுத்து வருகிறார்.
அதே நேரத்தில் அரசியல் கிளைமேட் மாறியுள்ள நிலையில், பாஜக தரப்புடன் இணக்கம் காட்டி வரும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் மீண்டும் அதிமுக கட்சிக்குள்ளும் செல்வாக்கு பெறலாம் என அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிரக்ஞானந்தா உள்பட தமிழகத்தின் 3 பேருக்கு அர்ஜூனா விருது! சரத் கமலுக்கு கேல்ரத்னா! வழங்கிய ஜனாதிபதி

டிடிவி தினகரன்
ஆனால் டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் அதிமுக தனது கையை விட்டு போய் விடுமோ என அஞ்சும் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

திடீர் அதிரடி
திமுகவை வீழ்த்த வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் சேர வேண்டும் என பாஜக தலைமை விரும்பும் நிலையில் எடப்பாடியுடன் சேர முடியாது என அதிரடி காட்டி இருக்கிறார் டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

ஒரு போதும் சேர மாட்டோம்
கூட்டத்திற்கு பின் செய்த அவர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சுயமாக சிந்தித்து செயல்படும், பழனிச்சாமியோடு ஒரு போதும் சேர மாட்டோம். பொதுக்குழு தொடர்பான வழக்கில் பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இரட்டை இலைக்கான மதிப்பும் மரியாதையும் இழந்து விடும் என அதிரடியாகக் கூறி இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு மகிழ்ச்சியடைந்தாலும் பாஜக தலைவர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
தன்னை அமைச்சராக ஆக்கிய சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கியது, தனக்கும் பாஜக தலைமை மூலம் பல நெருக்கடிகள் கொடுத்தது என அனைத்தையும் மறந்து அதிமுகவுடன் கரம் கோர்க்க தயாராக இருப்பதற்கு திமுக எதிர்ப்பே காரணம் என டிடிவி தினகரன் கூறி வந்தார். மேலும் அதிமுகவில் தற்போதைய சூழலில் சின்னம் முடங்கி விட்டது எடப்பாடி பழனிச்சாமியால் ஒன்றுமே செய்ய முடியாது எனவும் கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமியும் தினகரனுடன் சேர முடியாது என கூறி வந்தார். இந்நிலையில் தான் டிடிவியே எடப்பாடியுடன் சேர முடியாது என கூறியிருக்கிறார்.

பாஜக அதிருப்தி
கூட்டணி அமைத்தால் திமுகவை வெற்றி பெற முடியும். இல்லையென்றால் 2021 தேர்தலில் வெற்றி பெற்றதை போல அடுத்தும் திமுக தான் வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி தனது தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் அவருடன் இணைந்து செய்லபடுவேன் அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்த பிரச்சினையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியும் எடப்பாடி ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் எடப்பாடி, டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்த்து குறிப்பிடத்தகுந்த வெற்றி பெறலாம் நினைத்திருந்த பாஜக தரப்பு எடப்பாடியை போல் தற்போது டிடிவி தினகரன் வீம்பு பிடிப்பதால் அதிருப்தியில் இருக்கிறது என்கின்றனர் பாஜகவினர்.