ட்விஸ்ட்.. டெல்லியின் க்ரீன் சிக்னல்? இரட்டை இலை இல்லைனா.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த டிடிவி தினகரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன் தற்போது தனது பார்வையை எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திருப்பி இருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் இரட்டை இலை இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவுமே செய்ய முடியாது எனக் கூறியிருப்பது பல யூகங்களை எழுப்பி இருக்கிறது.

அதிமுகவை பொருத்தவரை ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் இடையே இருந்த மோதலானது. தற்போது டிடிவி தினகரன் எடப்பாடி இடையேயான மோதலாக உருமாறி இருக்கிறது.

தொடர்ந்து பாஜக தலைமைக்கு எதிராக அரசியல் செய்து வந்த டிடிவி தினகரன் திடீரென அந்தக் கட்சியுடன் நெருக்கம் காட்டுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு உறுத்தலாக இருக்கிறது. பாஜகவை வைத்து அதிமுகவில் மீண்டும் தினகரன் ஆதிக்கம் செலுத்தி விடுவாரோ எனவும் அஞ்சுகிறார்.

 ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனக்கு எதிராக பல ஆண்டுகள் முயற்சி செய்தும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுப்பதாக இல்லை. இந்நிலையில் பாஜகவின் பேச்சை கேட்டு டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்த்தால் பிற்காலத்தில் அது தனக்கான பின்னடைவாக மாறிவிடக்கூடாது என்பதால் மிகக் கவனமாக இருக்கிறார்.

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இதன் காரணமாகவே திமுகவை எதிர்க்க கூட்டணியில் இணைய தயார் என வெளிப்படையாக தினகரன் கூறியபோதும் ஒரு சதவீதம் கூட அதற்கு வாய்ப்பில்லை என கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இதற்கு டிடிவி தினகரன் கடுமையாக பதில் அளித்து இருந்தார். இதனால் பாஜக தலைமை தான் தற்போது இடியாப்ப சிக்கலில் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ள தமிழகத்தில் குறிப்பிடத் தகுந்த அளவு வெற்றி பெற பாஜக தமிழக தலைமை விரும்புகிறது.

 இரட்டை இலை

இரட்டை இலை

இதனால் டெல்லி தலைமை மூலம் அழுத்தம் கொடுத்தும் அதனை எடப்பாடி பழனிச்சாமி கவனிக்கவில்லை இதன் காரணமாக இரட்டை இலை முடக்கத்தை டெல்லி கையில் எடுக்கலாம் என கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள். அதன் வெளிப்பாடாகத்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை போல ஒரு செய்தியை பதிவு செய்திருக்கிறார் டிடிவி தினகரன். அது இரட்டை இலை இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான்.

தனிக்கட்சி?

தனிக்கட்சி?

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்வதற்கு முன்னால் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவுமே செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலை இருக்கிறது நாங்கள் புதிய கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்தது போல எடப்பாடியால் சந்திக்க முடியுமா என்றார்,

 அம்மாவின் விசுவாசிகள்

அம்மாவின் விசுவாசிகள்

அதோடு எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். அம்மாவின் விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கூறினார். இதன் மூலம் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படலாம் என்ற எச்சரிக்கையை எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் மறைமுகமாக விடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

சின்னம் முடக்கம்

சின்னம் முடக்கம்

மேலும் ஓ பன்னீர்செல்வத்தின் மீதும் கரிசனம் காட்டி வருவது அம்மாவின் விசுவாசிகள் ஒன்றாக சேர வேண்டும் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது .பாஜக தலைமையுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்க அவர் திட்டமிட்டு இருக்கிறாரா எனவும் யூகங்கள் கிளம்பி வருகிறது. இதனால் இடைத் தேர்தலைப் போல நாடாளுமன்ற தேர்தலின் போது இரட்டை இலை முடக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+