முதல்வர் வேட்பாளர் யார்? கடைசி வரை எடப்பாடி பெயரை கூட சொல்லாத டிடிவி தினகரன்.. முதல் நாளே இப்படியா!
சென்னை: என்டிஏ கூட்டணியில் டிடிவி தினகரன் மீண்டும் இணைந்தது எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தோஷம் அளிப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அதேபோல் 2021ஆம் ஆண்டு அமைக்க தவறிய ஜெயலலிதா ஆட்சியை இம்முறை அமைத்தே தீருவோம் என்று டிடிவி தினகரன் கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் டிடிவி தினகரன் தவிர்த்து நகர்ந்து சென்றார்.
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்திருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதையடுத்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சென்று டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்பின் பியூஷ் கோயல் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பியூஷ் கோயல் பேசுகையில், 2004ஆம் ஆண்டு டிடிவி தினகரன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போதே, எனக்கு அவரை நன்றாக தெரியும். அவர் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு திரும்பி இருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சந்தோஷம்.
ஒரு குடும்பமாக இணைந்து திமுகவின் குடும்ப மற்றும் ஊழல் ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவோம். என்டிஏ கூட்டணி அரசு மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்கும். தமிழின் பெருமையை காப்பதில் தேசிய ஜனநாயக கூட்டணி முனைப்புடன் செயல்படும் என்று தெரிவித்தார். இதன்பின் டிடிவி தினகரன் பேசுகையில், எங்களின் பங்காளி சண்டையை ஓரமாக வைத்துவிட்டோம்.
அதனை எல்லாவற்றையும் மறந்துவிட்டு எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு தமிழக மக்கள் நலனுக்காக முழு மனதுடன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளோம். நிச்சயமாக என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணி ஆட்சியில் அமமுக பங்கேற்கும். இந்த கூட்டணியை பலப்படுத்த அமமுக உறுதுணையாக இருக்கும். அதற்காக அமமுக தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அமைக்கத் தவறிய ஜெயலலிதாவின் ஆட்சியை இம்முறை அமைத்தே தீருவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா? முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்று கூறி நகர்ந்து சென்றார். அவார் எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் மவுனம் காத்தது விவாதமாகி இருக்கிறது.
-
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா












Click it and Unblock the Notifications