"திடீர்" சான்ஸ்.. விட மனசேயில்லை.. திணறி தவிக்கும் தினகரன்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த 2 கட்சிகள்!
தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: விஜயகாந்த் எல்லாம் 2வது ஆப்ஷன்தான்.. முதல் குறியே அதிமுகதான்.. அப்படித்தான் தன்னுடைய வியூகத்தை அமைத்து வருகிறார் டிடிவி தினகரன்.. அந்த வகையில்தான், தேமுதிகவை இழக்க மனசில்லாமல் தொடர்ந்து அக்கட்சியுடன் கூட்டணி பேசி வருகிறோம் என்று தினகரன் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
Recommended Video
தேமுதிக அதிமுகவில் இருந்து விலகியதுமே, தனித்து போட்டி என்று அறிவித்தது.. ஆனால், அந்த கட்சி தனித்து போட்டியிடும் சூழலில் இல்லை என்பது தமிழகம் அறிந்த உண்மை.
அதனால் 2 சான்ஸ் பேசப்பட்டது.. ஒன்று கமலுடன் சேர்வது, மற்றொன்று தினகரனுடன் இணைவது என்பதே அந்த 2 ஆப்ஷன்கள்.

தேமுதிக
இதில், அமமுகவின் பெயரே அதிகம் அடிபட்டது.. இதற்கு காரணம், சசிகலாவால்தான், தேமுதிக தனது முதல் அரசியல் கூட்டணியையே அதிமுகவுடன் ஏற்படுத்தியது.. அந்த விசுவாசம் இப்போதும் பிரேமலதாவிடம் உள்ளது.. இது ஒரு பக்கம் இருந்தாலும், எடப்பாடி தரப்பை வெறுப்பேற்றவே சசிகலாவை தூக்கி வைத்தும் பிரேமலதா பேசியதை மறுக்க முடியாது.. மேலும் சசிகலாவை எப்போது வேண்டுமானாலும் பிரேமலதா சந்திக்க கூடும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியது.

பேச்சுவார்த்தை
அந்த வகையில், அமமுகவுடனேயே தேமுதிக கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு தினமும் எழுந்தபடியே உள்ளது.. அதற்கேற்றார்போல, அமமுக துணைப் பொதுச்செயலாளர்கள் பழனியப்பன், மாணிக்க ராஜா ஆகியோருடன் தேமுதிகவைச் சேர்ந்த பார்த்தசாரதி, இளங்கோவன் பேசியதாக தகவல்களும் வெளியாகின.

உடன்பாடு?
இதனிடையே, தேமுதிக - அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்ததாகவும் தினகரனே செய்தியாளர்களிடம் உறுதி செய்திருந்தார்.. ஆனால்,கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

உடன்பாடு
ஆனால், கடந்த 2, 3 நாட்களாகவே இதில் இழுபறி நீடித்து வருவதாக தெரிகிறது.. முதலமைச்சர் வேட்பாளர், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை என்பன போன்ற தகவல்களும் வெளியாகின. அதனால், இந்த பேச்சுவார்த்தை திடீரென டிரேக் மாறி திமுக பக்கமும் சென்றது.. ஒருவேளை திமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா எந்த சந்தேகமும் கிளம்பியது.. இந்த சமயத்தில்தான் தினகரன், தேமுதிகவுடன் தற்போதும் பேச்சுவார்த்தை தொடர்வதாக கூறியுள்ளார்.

தினகரன்
தினகரன் இப்படி சொல்வதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. அமமுகவை பொறுத்தவரை அதிமுகவை வரும் தேர்தலில் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே முக்கிய இலக்காக உள்ளது. அதிமுகவை பலவீனப்படுத்தினால்தான் தேர்தலுக்குப் பிறகு அதிலிருந்து பல தலைவர்கள் பிரிந்து தங்கள் பக்கம் வருவார்கள், கட்சியை கைப்பற்றுவது எளிதாகும் என்ற கணக்கில் உள்ளார்..

திடீர் சான்ஸ்
அந்த வகையில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்து அவர்களிடம் உள்ள வாக்கு வங்கியை வைத்து அதிமுகவை பலவீனப்படுத்தி பல தொகுதிகளில் தோல்வி அடைய வைக்கும் பிளான்தான் தினகரனுடையது.. இதில் திமுகவையும் கவனிக்கிறார்.. எந்த காரணத்தை கொண்டும் திமுக, தேமுதிகவை இழுத்து கொள்ள கூடாதே என்ற முனைப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.. தேமுதிகவில், எதிர்பாராமல் வந்த திடீர் சான்ஸ்தான் இந்த கூட்டணி வாய்ப்பு.. இதை விட்டுவிடக்கூடாதே என்பதிலும் கவனமாக இறங்கி வருவதாக தெரிகிறது. பார்ப்போம்..!!
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications