வேகம் காட்டும் டிடிவி தினகரன்.. அமமுகவின் டாப் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.. ஏன்?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய மாற்றங்களை செய்து அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. அதிமுகவில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும்.

அமமுக
அதிமுக பொதுக்குழு விவகாரம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அமமுகவிலும் பொதுக்குழு நடக்க உள்ளது. அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெற்ற அதே வானகரத்தில் நடக்க உள்ளது. அமமுக துணை தலைவர் எஸ் அன்பழகன் தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது. இதற்கான அழைப்பிதழ் நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது.

பொதுக்குழு
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய மாற்றங்களை செய்து அதன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளராகவும், கழக தலைமை நிலையச் செயலாளராகவும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அமமுக துணைப் பொதுச்செயலாளராக C.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகிகள் மாற்றம்
கழக தலைமை நிலையச் செயலாளராக வீரபாண்டி S.K.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் சண்முகவேலு, முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எஸ்.கே செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இது போக அமமுகவில் இதுவரை, கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த C.சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்த வீரபாண்டி S.K.செல்வம் அவரவர் வகித்துவந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

பொறுப்பு மாற்றம்
ஏற்கனவே கழக துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலுள்ள M.ரெங்கசாமி மற்றும் G.செந்தமிழன் ஆகியோர் தொடர்ந்து அந்த பொறுப்பில் தொடர்வார்கள். அதேபோல் ஏற்கனவே கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலுள்ள S.V.S.P. மாணிக்கராஜா தொடர்ந்து அந்த பொறுப்பில் நீடிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அமமுக பொதுக்குழுவிற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் டிடிவி தினகரன் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications