இரவில் நடந்த திடீர் ட்விஸ்ட்.. டிடிவி தினகரனை திடீரென சந்தித்த அண்ணாமலை.. கூட்டணியில் திருப்பம்?
சென்னை: பாஜக அதிமுகவின் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் நேற்று திடீரென பாஜகவின் மூத்த தலைவர் அண்ணாமலையை சந்தித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக கூட்டணியிலும், பாஜக உள்ளேயும் கடுமையான உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து அமமுக டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேறினர். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இவர்கள் வெளிப்படையாக் அறிவித்தனர்.

இதையடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து கடந்த சில வாரங்களுக்கு முன் பேசினார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன.
மீண்டும் அண்ணாமலை டிடிவி தினகரன் சந்திப்பு
பாஜக அதிமுகவின் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் நேற்று மீண்டும் திருமண நிகழ்வு ஒன்றில் திடீரென பாஜகவின் மூத்த தலைவர் அண்ணாமலையை சந்தித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சில நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களும் பரபரப்புக்கும் வித்திட்டுள்ளது. உண்மையில் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டதா.. அல்லது அண்ணாமலை வேறு ஏதாவது முயற்சிகளை செய்கிறாரா என்று விவாதங்கள் எழுந்தது.
தனது அடுத்த நினைப்பாட்டை இன்னும் சில மாதத்திற்கு பின் அறிவிப்பதாக கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில்தான இந்த சந்திப்பு நடந்தது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு சிக்கல்
அதிமுக - பாஜக கூட்டணிக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டனர். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் செங்கோட்டையன் திடீரென கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். அதில், எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.
இப்போது அதிமுக தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை, உடனே சேர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் காலக்கெடு விதித்தார். அதோடு, கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை தான் நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே என கேட்டபோது 2009 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களால் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கப்பட்டு இருக்கிறார்.
பத்து நாட்களில் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்க்கப்படவில்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து கட்சியை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுவேன் என செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
செங்கோட்டையன் சந்திப்பு
இந்த நிலையில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் எதிரி என்று டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன், எங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமே பழனிசாமிதான். துரோகத்தை வீழ்த்தவே அமமுக தொடங்கப்பட்டது. அந்த துரோகத்தை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது. துரோகத்தை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், ஜெயலலிதாவின் தொண்டர்களை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ளோம், என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக அதிமுகவின் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன் நேற்று திடீரென பாஜகவின் மூத்த தலைவர் அண்ணாமலையை சந்தித்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications