டங்ஸ்டன்: திமுக ஸ்டிக்கர் ஒட்ட அரிட்டாப்பட்டி செல்லும் முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை கடும் விமர்சனம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி விவாசாயிகள் நலனுக்காக மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் உடனடியாக கிளம்பிச் செல்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிமத்தை எடுப்பதற்கு சுரங்க உரிம குத்தகைக்கு கடந்த ஆண்டு ஏலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், திட்டத்தைக் கைவிடக் கோரியும் அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் மத்தியில் தொடர் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யுமாறு தமிழ்நாடு அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. இதுதொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி கடிதம் எழுதினார். தொடர்ந்து, சட்டசபையிலும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுடன் சந்தித்துப் பேசி இத்திட்டத்தை ரத்து செய்வதற்கு ஆதரவாக நிற்பதாக கூறியிருந்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான குழு சந்தித்து பேசினர். இதையடுத்து டங்ஸ்டன் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய கோரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, கிராமத்தின் முக்கிய நபர்களுடன் அண்ணாமலை, டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தார். அப்போது பிரதமர் மோடியுடன் இது தொடர்பாக பேசி நல்ல முடிவை தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு கடந்த இரு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த அறிவிப்பு கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை கிராம மக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, அரிட்டாப்பட்டியில் முதல்வருக்கு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் இன்று அரிட்டாப்பட்டிக்குச் செல்கிறார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி விவாசாயிகள் நலனுக்காக மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் உடனடியாக கிளம்பிச் செல்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற முக ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் முக ஸ்டாலின் தற்போது பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால் இந்த "டிராமா மாடல்" அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications