தண்டலம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயங்கரம்.. கெட்ட வார்த்தைகளில் மோதி கொண்ட பிரபல நடிகைகள்.. வீடியோ லீக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அடுத்த தண்டலம் தாரப்பாக்கம் நாச்சியார் ஹவுஸ் பகுதியில் நடந்த டிவி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட், ஒரு போர்க்களமாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.. அங்கு நடந்து வரும் ஒரு சீரியல் ஷூட்டிங்கில், மூத்த நடிகையான ஆர்த்தி ராம் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை சசிலயா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அப்போதுதான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்றும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அடுத்த காட்சிக்காக டிக் டாக் நடிகை சசிலயா தயாராகி, சக துணை நடிகைகளுடன் அங்கு போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.

Chennai Tandalam Nachiyar House Serial shooting fight Actress Aarthi Ram Tiktok Sasilaaya Sofa fight video Serial Director Police complaint

அப்போது, தனது காட்சியை நடித்து முடித்துவிட்டு கடுமையான களைப்புடன் ஓய்வெடுப்பதற்காக மூத்த நடிகை ஆர்த்தி ராம் அந்த சோபாவை நோக்கி வந்துள்ளார்.. ஆனால், சோபாவில் உட்கார்ந்திருந்த சசிலயா மற்றும் சக துணை நடிகைகள் ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து சிரித்துக் கொண்டே, மூத்த நடிகை என்றும் பாராமல் ஆர்த்தி ராமுக்கு உட்கார இடம் கொடுக்காமல் வேண்டுமென்றே உட்கார்ந்திருந்ததாக சொல்லப்படுகிறது.

பிரபல நடிகைகள் மோதல்

எனினும் சசிலயாவுடன் உட்கார்ந்திருந்த ஒரு துணை நடிகை, சீனியர் நடிகை வந்துவிட்டாரே என்று எழுந்து இடம் கொடுக்க முயன்றுள்ளார். உடனே சசிலயா, அந்த துணை நடிகையின் கையைப் பிடித்து இழுத்து, "நீ உட்கார், எழுந்திரிக்காதே" என்று தடுத்தாராம்.
.
இதை பார்த்ததும் கடும் ஆத்திரமடைந்த நடிகை ஆர்த்தி ராம், "நான் சீனியர் நின்று கொண்டிருக்கிறேன், ஒரு ஜூனியரான நீ எனக்கு இடம் கொடுக்காமல் உட்கார்ந்திருக்கலாமா?" என்று சத்தம் போட்டபடி சசிலயாவின் கையில் ஓங்கி அடித்திருக்கிறார்.. அத்துடன் நிறுத்தாமல், ஆர்த்தி ராம் தனது செல்போனை எடுத்து சசிலயாவை வீடியோ எடுக்கவும் துவங்கி உள்ளார்..

இந்த திடீர் தாக்குதலை கொஞ்சமும் எதிர்பார்க்காத சசிலயா நிலைகுலைந்து போனார். பிறகு ஆவேசமடைந்த அவர், "என்னை அடிக்க நீ யாருடி? உனக்கு யார் அந்த உரிமையை தந்தது? நீ என்னை அடிச்சா நான் பார்த்துட்டு சும்மா இருப்பேனா?" என்று படப்பிடிப்பு தளமே அதிரும் அளவுக்குக் கூச்சலிட்டுள்ளார்

அசிங்கமான வார்த்தை

விஷயம் கைமீறிப் போக, 2 நடிகைகளும் ஒருவரையொருவர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தபடியே, மிகக் கடுமையான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

ஒருகட்டத்தில், இந்த மோதல் குறித்து சசிலயா சீரியல் இயக்குநரிடம் நேராக சென்று புகார் அளித்தார். இருதரப்புக்கும் இடையே சமாதானம் பேச இயக்குநர் அங்கு ஓடி வந்தார். ஆனால் அவர் முன்னிலையிலேயே 2 நடிகைகளும் எல்லையை மீறி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளனர்..

அப்போது ஆர்த்தி ராம் டைரக்டரிடம், "சார், நான் ஒரு அசிங்கமான வார்த்தை கூட பேசவில்லை சார்" என்று நியாயம் பேசினார். ஒருவழியாக இயக்குநர் இருவரையும் அப்போதைக்கு சமாதானம் செய்து வைத்திருக்கிறார்..

இந்த விவகாரம் அத்தோடு முடியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்த 2 நடிகைகளும் போட்ட குடுமிப்பிடி சண்டையை அங்கிருந்த சில துணை நடிகைகள் தங்களது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பரப்பிவிட்டனர். இந்த வீடியோதான் இணையத்தில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது.

2 நடிகைகளிடமும் விசாரணை

இந்த விவகாரம் சீரியல் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியதையடுத்து, சண்டையிட்ட ஆர்த்தி ராம் மற்றும் சசிலயா ஆகிய 2 பேரிடமும் இந்த சம்பவம் குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கக் கோரி இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதுமட்டுமல்ல, அதுவரை இருவரும் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாகச் சந்திக்கக் கூடாது என்றும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், இரண்டு சின்னத்திரை நடிகைகளும் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, காவல்துறையை நாட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+