ஆட்டம் ஆரம்பித்த விஜய்.. தவெக கல்வி விருது விழாவுக்கு வர்றதுக்குள்ள போன உத்தரவு! மலைத்த மாமல்லபுரம்
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற உள்ளது.. 2ம் கட்டமாக நடக்க உள்ள இந்த விழாவானது மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.. இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தவெக தலைவர் விஜய் பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.. அத்துடன், தவெக குறித்த முக்கிய தகவல் ஒன்றும் இணையத்தில் கசிந்து, பரபரப்பை தந்து வருகிறது.
மாணவ, மாணவியரின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வருடந்தோறும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில, தமிழகம், புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய், விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி கவுரவித்து வருகிறார்.
இது 3வது வருடம்
அந்த வகையில், கல்வி விருது வழங்கும் விழா இப்போது 3வது வருடமாக நடக்கிறது.. முதற்கட்டமாக கடந்த 30ம் தேதி நடந்தது.. அப்போது இவ்விழாவில் தமிழகத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் 600 மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி கவுரவித்திருந்தார் விஜய்..
ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களுடன் விஜய் போட்டோ எடுத்துக் கொண்டார்
ஊக்கத்தொகை சான்றிதழ்
இந்நிலையில், தவெக சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும், ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்குகிறார் விஜய்.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்," முதல் கட்டமாக 30-ஆம் தேதி பாராட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இரண்டாவது கட்ட விழா மாமல்லபுரம் 4.5 ஷாரட்டனில் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசு வழங்கி பாராட்டுகிறார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
.
பறந்த விஜய்யின் உத்தரவு
இதனிடையே, கல்வி விருது வழங்கும் விழா முடிந்ததுமே, பூத் கமிட்டி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, பூத் கமிட்டி கருத்தரங்கங்கள் மறுபடியும், மாவட்ட ரீதியாக, விஜய் தலைமையில் நடைபெற போகிறதாம்.. இதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிதான், அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது..
விரைவாகப் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமனம் செய்து, மாவட்ட ரீதியாக பூத் கமிட்டி லிஸ்ட்டையும் தயாரிக்கவே, இப்படியொரு உத்தரவை பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் முன்கூட்டியே பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், தவெக-வுக்குள் ஒரே பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.
-
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ்












Click it and Unblock the Notifications