Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி.. பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் கிடையாது.. ஆதவ் அர்ஜுனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, 90 தொகுதிகள் + 2.5 வருடம் முதல்வர் பதவி தருகிறோம் என பேரம் பேசுனாங்க.. ஆனால் நாங்கள் டெல்லிக்கு அடி பணியாமல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம் என்று கூறியுள்ளார். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் கிடையாது என்றும், எனக்கு ஆஃபர் தேவையில்லை.. மக்களின் நம்பிக்கைதான் தேவை.. நாம் உருவாக்கும் அரசு மதசார்பற்ற அரசாக இருக்கும் என்று விஜய் கூறியதாகவும் ஆதவ் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கட்சி ஆரம்பித்ததுமே கூறினார். ஆனால் அவரை நம்பி இதுவரை எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. இதனால் தவெக தனித்து விடப்பட்டது.

TVK Aadhav Arjuna Says Party Will Contest All 234 Seats Rejects Delhi Pressure

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி

இதற்கிடையே பாஜகவும் விஜய்யை கூட்டணிக்கு சேர்க்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது விஜய் கூடுதல் தொகுதிகளை கேட்டதால் முதலில் பாஜக தயக்கம் காட்டியதாகவும், பின்னர் விஜய் கேட்ட 90 தொகுதிகள் + துணை முதல்வர் பதவி என கொடுக்க முன்வந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளாததாலும் பாஜகவும் கூட்டணிக்கு விஜய்யை அழைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து தான் ரஜினி விவகாரத்தில் சர்ச்சை கருத்தை கூறிய ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் சரமாரி கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் சென்னை கொளத்தூரி இன்று நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என கூறியுள்ளார். ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-

ஆர்ப்பாட்டத்தில் என்ன நடந்தது என்று ரஜினிக்கே தெரியும். விரிவாக அன்று பேச முடியவில்லை. இந்த ஒரு வாரமாக கடுமையான வலியில் விஜய் இருக்கிறார். நானும் இருக்கிறோம். தமிழ்நாடு மக்களும் இருக்கிறார்கள். தூத்துக்குடியில் ஒரு 12 ஆம் வகுப்பு படித்த மாணவி கொல்லப்பட்டார். இந்த பிரச்சினையை திசை திருப்பத்தான் இவ்வளவும் நடந்து கொண்டு இருக்கிறது.

தூத்துக்குடி சம்பவம்

தூத்துக்குடியில் நடைபெற்றது கொடூரமானது. 6 நாள் ஆகியும் இன்னும் குற்றவாளியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல்வர் ஏன் அங்கு போகவில்லை. அதனால்தான் கோபப்பட்டு முட்டாள் முதல்வர் என்று சொன்னேன். கோபத்தின் வெளிப்பாடு அது.. முதல்வரும் துணை முதல்வரும் ஏன் போகவில்லை. நான் எதற்கும் பயப்படாதவன்.

உங்களுடைய தவறுகளை உறுதியாக உண்மையாக எடுத்து வைப்போம். திமுக கூட்டணி கட்சிகள் போனதா? என்னிடம் அதிகாரம் இல்லை. பண பலம் இல்லை. சாமானியன், எல்லா தொழிலையும் தூக்கி போட்டுட்டு வந்துடெடேன். என்னுடைய குடும்பமே என்னுடைய அரசியல் முடிவுகளுக்கு எதிராக உள்ளது.

கொள்கை எதிரி பாஜக என அறிவித்துவிட்டு

அவதூறு பற்றி நான் கவலைப்படுபவன் இல்லை. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். எனக்கு ஆஃபர் தேவையில்லை.. மக்களின் நம்பிக்கைதான் தேவை.. நாம் உருவாக்கும் அரசு மதசார்பற்ற அரசாக இருக்கும் என்று விஜய் கூறினார். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் கிடையாது.

திமுகவை சொல்ல சொல்லுங்கள் பாஜக எங்களுக்கு கொள்கை எதிரி என்று.. சொல்ல மாட்டார்கள். ஏற்கனவே கூட்டணி வைத்தவர்கள்.. நாளைக்கும் கூட்டணி வைக்க தயங்கமாட்டார்கள்.. கொள்கை எதிரி, பாஜகவோடு நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்று திமுக சொல்லுமா.. ஆனால் நாங்கள் முதலிலேயே கொள்கை எதிரி பாஜக என அறிவித்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறோம்.. என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+