என் மீது ஏன் ஆக்சன்? தவெக மாவட்ட செயலாளர்தான் பொறுப்பு! நைசாக கோர்த்துவிட்ட புஸ்ஸி ஆனந்த்! ட்விஸ்ட்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி எம். ஜோதிராமன் விசாரித்து வருகிறார். . இந்த வழக்கில் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதில், ஒரு நிகழ்ச்சியை நடத்திய நபராக உங்களுக்கு இந்த விவகாரத்திற்கு பொறுப்பு இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தை கண்டித்த நீதிபதிகள், உங்கள் மீது தவறே இல்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் தானே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தீர்கள். உங்கள் மீது தவறு இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்.. நான் மக்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் இருந்தே நடவடிக்கை எடுக்க முடியும் என்று நீதிபதிகள் கூறினர்.
புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்
இதற்கு புஸ்ஸி ஆனந்த் தரப்பு.. இதில் என் மீது ஆக்சன் எடுக்க வேண்டியது ஏன்? நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைக்கவில்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன். அவரை ஏற்கனவே கைது செய்துவிட்டனர். அவர் மீது நான் குற்றஞ்சாட்டவில்லை. அப்படி இருக்க என் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

எங்கள் சொந்தக் கட்சியினரைக் கொல்லும் எண்ணம் இல்லை. ஒரு விபத்தை குற்றமற்ற கொலை என்று கூற முடியாது.
காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறியதுதான் சிக்கலுக்கு காரணம். நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையிடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால் , அந்த இடம் மனுதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அது போலீஸ் எங்களுக்கு வழங்கிய இடம். இதற்கு பின் ஒரு தீய நோக்கம் இருப்பதாக நினைக்கிறோம். கூட்டம் அதிகமான போது கூட்டத்திற்குள் சில குண்டர்கள் நுழைந்தனர். அவர்கள் கைகளில் ஆயுதங்களை வைத்து இருந்ததாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். திட்டமிட்டு இதில் அசம்பாவிதம் செய்துள்ளனர்.
அரசு தரப்பு வாதம்
தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், கரூரில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டது தவெக. அந்த இடத்தை கட்சியே தேர்ந்தெடுத்தது. 27ம் தேதி செப்டம்பர் பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. Notified இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. விஜய் தாமதமாக வந்தார். அது சிக்கலானது.
கூட்டங்களை நடத்துவது தொடர்பாக இனி நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்கும் வரை, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தமிழக காவல்துறை கூட்டங்களுக்கு அனுமதி வழங்காது, என்று குறிப்பிட்டார்.
தவெக - பரபரப்பு வாதம்
இதற்கு தவெக தரப்பு வைத்த வாதத்தில், அந்த குண்டர்கள் மக்கள் மீது ஆயுதங்களை வைத்து தாக்கினர். சில குண்டர்கள் காலணிகளை தூக்கி விஜய் மீது எறிந்தனர். வேலுசாமிபுரம் ஆட்சேபனைக்குரியதாக இருந்தால், மனுதாரர்களின் கோரிக்கையை காவல்துறை நிராகரித்திருக்க வேண்டும் . தடியடி காரணமாக கூட்டம் கோபமடைந்ததாகவும், தடியடி ஏன் நடத்தப்பட்டது சந்தேகம் தருகிறது. கூட்டத்தில் ரசாயனம் எறியப்பட்டது.
நிகழ்வுக்கு ஒரு நாள் முன்புதான் காவல்துறை அனுமதி வழங்கப்பட்டது. நேரம் இருந்திருந்தால், டிவிகே மாற்று இடத்தில் அனுமதி பெற்றிருக்கும் என்று அவர் கூறுகிறார். காவல்துறை விதித்த ஒரு விதிமுறை கூட ஏற்பாட்டாளர்களால் மீறப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கன்னியாகுமரியில் நடைபெறும் உள்ளூர் திமுக கூட்டத்தில் ஏதேனும் விபத்து நடந்தால், திமுக பொதுச் செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்யுமா. இதில் மனுதாரர்கள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எந்த குற்றச்சாட்டையும் செய்யவில்லை. அவர்கள் மீது தவறே இல்லை என்று என்று தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளனர்.
-
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்?












Click it and Unblock the Notifications