"We are helpless"னு சொன்ன சீனியர் வக்கீல்கள்! டெல்லியில் ஆதவ் அர்ஜுனா அப்செட்! அடுத்த மூவ் என்ன?
சென்னை: தேசிய பாதுகாப்பு படையினருடன் தவெக பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர் டெல்லிக்குச் சென்றது ஏன் என்பதையும் பார்க்கலாம்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக விஜய்யின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் விவகாரத்தில் வேண்டுமென்றே நெரிசலான சாலையை பிரச்சாரத்திற்கு காவல் துறை ஒதுக்கியதாக தவெக தரப்பு குற்றம்சாட்டுகிறது.
இதனால் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் விஜய் விளக்கமளித்த நிலையில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசும் செந்தில் பாலாஜியும் கடும் பதிலடிகளை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து பொதுவெளியில் வந்த ஆதவ் அர்ஜுனா, "விரைவில் கரூர் மக்களை சந்திப்போம்" என்றார். இந்த நிலையில் அவர் தேசிய பாதுகாப்பு படை வீரர்களுடன் டெல்லிக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ஏற்பாடு செய்து கொடுத்த தனி விமானத்தில் கடந்த 1 ஆம் தேதி ஆதவ் சென்ற நிலையில் அவருடன் 5 பேர் சென்றுள்ளதாக தெரிகிறது. அதில் இருவர் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களாம். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தை தவெக நாடவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனியர் வழக்கறிஞர்களான அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபல் ஆகிய இருவரையும் தங்களுக்காக வாதாட ஆதவ் கேட்டாராம்.
ஆனால் அவர்களோ நாசுக்காக மறுத்துவிட்டனராம். இதனால் வேறு ஒரு சீனியர் வழக்கறிஞரை ஆதவ் நாடவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்புக்கு மத்திய அரசை சேர்ந்த ஒரு பெரும்புள்ளி ஆதவிற்காக ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா ட்வீட் போட்டுவிட்டு டெலிட் செய்திருந்த நிலையில் அவருக்காக டெல்லியில் முக்கிய புள்ளிகள் ஏன் உதவிக்கு செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அடுத்தடுத்து பிரச்சாரங்களுக்கு திட்டமிட்டுள்ள நிலையில் கரூர் வழக்குகளுக்கு ஒரு முடிவு தெரியாமல் அடுத்த கட்ட பிரச்சாரங்களுக்கு செல்வதில் எந்த பலனும் இல்லை என்பதாலும் தவெக தரப்பினர் விரைந்து செயல்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
-
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications