நடத்தை விதி வந்தால்.. வெளியே வருவாருன்னு சொன்னீங்களே.. வீட்டுக்குள் விஜய்... விழிபிதுங்கும் தம்பிகள்
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலுக்கு வந்தாலே அரசியல் களம் அக்னி நட்சத்திர வெயிலை விட அதிகமாய் கொதிக்கும். ஆனால், பனையூர் ஏரியாவிலோ நிலவரம் நேர்மாறாக இருக்கிறது. "தேர்தல் அறிவிப்பு வந்தா பாருங்க, எங்க விஜய் சும்மா புயலா கிளம்புவார்" என்று எகிறிக் குதித்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள், இப்போது கையை பிசைந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.

கட்டுப்பாடா? தயக்கமா?
நடத்தை விதிகள் வருவதற்கு முன்பு வரை, "போலீஸ் கெடுபிடி கொடுக்குது, அனுமதி மறுக்கிறாங்க" என்று ஒரு காரணத்தைச் சொல்லி தப்பித்துக் கொண்டிருந்தனர் தவெக தரப்பினர். "இப்போ தான் எல்லாமே தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டுல வந்துடுச்சே... இனிமே தளபதிக்கு என்ன தடை?" என்பதுதான் அடிமட்டத் தொண்டனின் ஆதங்கமான கேள்வி.
ஆனாலும், விஜய் இன்னும் பனையூர் இல்லத்தை விட்டு வெளியே வராமல் இருப்பது விஜய் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகிகளின் 'ஆஃப் தி ரெக்கார்டு' குமுறல்கள்
"மத்த கட்சிங்க வேட்பாளர் பட்டியலை ரெடி பண்ணிட்டாங்க பெயர்தான் சொல்லல் .. , பிரச்சார வேனை ரெடி பண்ணி, தெருத் தெருவா இறங்க போறாங்க. ஆனா நம்மகிட்ட இன்னும் முறையான வியூகம் என்னன்னே தெரியல. வெறும் சோஷியல் மீடியா போஸ்ட்டும், அறிக்கை அரசியலும் மட்டுமே ஒரு புது கட்சிக்கு கைகொடுக்காது" என புலம்புகிறார் ஒரு மாவட்டச் செயலாளர்.
விஜய்யைப் பொறுத்தவரை, 'அவசரப்பட்டு அடி எடுத்து வச்சு சறுக்கக்கூடாது' என்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், 2026-ஐ இலக்காக வைத்தாலும், இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஒரு 'இம்பேக்ட்' ஏற்படுத்தாவிட்டால், அது கட்சிக்கு பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
மௌனத்தின் பின்னணி என்ன?
வியூகம் வகுக்கிறாரா?: மற்ற கட்சிகளின் பலம் மற்றும் பலவீனத்தை முழுமையாகக் கவனித்து, கடைசி நேரத்தில் களமிறங்க திட்டமிடுகிறாரா?
உட்கட்சி பூசலா?: மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்குள் நடக்கும் ஈகோ மோதல்கள் விஜய்யை அப்செட் ஆக்கியுள்ளதா?
சட்ட ரீதியான சிக்கல்களா?: கட்சிப் பதிவு மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவதால் களப்பணி தாமதமாகிறதா?
சோம்பேறித்தனம் : விஜய் வீட்டிற்குள்ளே இருந்தது.. வெயிலில் வெளியே வர யோசிக்கிறாரா? பணிகளை களத்தில் செய்ய யோசிக்கிறாரா? என்ற கேள்வி உள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் வெயிலில் தகித்துக் கொண்டிருக்கிறது. மற்ற கட்சித் தலைவர்கள் வேர்க்க விறுவிறுக்க வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் பிஸியாக இருக்க, விஜய் மட்டும் இன்னும் பனையூர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. "மக்களுக்காக உழைக்கப் போகிறேன்" என்று முழங்கியவர், நிஜமான களப்பணியின் சவால்களைக் கண்டு அஞ்சுகிறாரா அல்லது வெயிலில் இறங்கி வேலை செய்யத் தயங்குகிறாரா என்ற கேள்வி தவெக தொண்டர்களிடையே மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. அரசியலில் 'சோம்பேறித்தனம்' என்பது அரசியல் தற்கொலைக்குச் சமம் என்பதை உணராமல், வெறும் அறிக்கை அரசியலோடு அவர் ஒதுங்கியிருப்பது, கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடுமோ என்ற அச்சம் நடுநிலை நோக்கர்களிடையே எழுந்துள்ளது.
காரணம் எதுவாக இருந்தாலும், "விஜய் வருவார்... தலைகீழாக மாற்றிக்காட்டுவார்" என நம்பியிருந்த தம்பிகளுக்கு, இப்போதைக்கு 'வெயிட்டிங் லிஸ்ட்' தான் பதிலாக இருக்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த 'சைலண்ட்' மோட் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
-
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications