விஜய் முகம் முழுக்க சோகம்.. வளர்த்துவிட்ட தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி உடலுக்கு நேரில் அஞ்சலி
சென்னை: மறைந்த திரைப்பட தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தான் சென்னை பட்டினப்பாக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த ஆர்பி சவுத்ரியின் உடலுக்கு விஜய் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மகன்களான நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் ஆர்பி சவுத்ரி. இவர் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவாவின் தந்தையான இவர் கார் விபத்தில் மரணமடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆர்பி சவுத்ரி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் விபத்தில் சிக்கியது. இதில் ஆர்பி சவுத்ரி படுகாயமடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
ஆர்பி சவுத்ரியின் உடல் உதய்ப்பூரில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் திரையுலக கலைஞர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் இன்று மாலையில் விஜய், ஆர்பி சவுத்ரியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். ஆர்பி சவுத்ரியை எடுத்து கொண்டால் விஜய்க்கு மிகமிக முக்கியமான தயாரிப்பாளர் ஆவார். விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட் அடித்த துள்ளாத மனமும் துள்ளும் , பூவே உனக்காக என்பது உள்பட பல திரைப்படங்களை ஆர்பி சவுத்ரி தான் தயாரித்தார்.
அதுமட்டுமின்றி விஜய்க்கும், நடிகர் ஜீவாவிற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் நண்பன் திரைப்படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை ஜீவா கொண்டாடினார். தனது வீட்டு பால்கனியில் நின்று அவர் விசிலடித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications