"வெற்றித் தலைவரே" ஒரு 'க்' போட சொன்னது தப்பா.. விஜய்-க்காக வைத்த 26 பேனர்களில் எழுத்துப் பிழை!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜயை வரவேற்கும் வகையில், பல்வேறு பகுதிகளிலும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீ ராமச்சந்திரா ஹாலிற்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள 26 பேனர்களில் எழுத்துப் பிழை இருப்பது விமர்சனத்தை பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையிலான முதல் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 2,150 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்காக 22 வகையான சைவ உணவு தயார் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து நிர்வாகிகள் வந்திருப்பதால், அவர்களுக்கு அசைவ உணவால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் அவரின் உடல்நலனை கருத்தில் கொண்டு தவெக நிகழ்ச்சியில் சைவ உணவுகளே அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தவெக பொதுக்குழு கூட்டத்தில் 15க்கும் அதிகமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தவெகவின் அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கை, பூத் கமிட்டி மாநாடு மற்றும் விஜய் சுற்றுப்பயணம் உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தவெக பொதுக்குழுவிற்கு விஜயை வரவேற்கும் வகையில், திருவான்மியூர் சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த பேனர்களில் பெரும்பாலான பேனர்கள் எழுத்துப் பிழையுடன் இருப்பது விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டதாக வெளியான அறிக்கையிலேயே, ஏராளமான எழுத்துப் பிழைகள் இருந்தன. இத்தனைக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரிலேயே ஒற்றுப் பிழை இருந்தது.
இதன்பின் ஒற்றுப்பிழை இருந்ததாக சோசியல் மீடியாவில் கிண்டல் செய்யப்பட்ட போது, தவெக சார்பாக வெளியிடப்பட்ட அடுத்த அறிக்கையில் தேவையில்லாத வார்த்தைகளுக்கும் ஒற்றெடுத்து சேர்க்கப்பட்டது. அதேபோல் மகளிர் தினத்தன்று தவெக சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கூட We Stand against Woman Harassment என்பதற்கு பதிலாக We Stand for Woman Harassment என்று எழுதப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தவெக பொதுக்குழுவையொட்டி வைக்கப்பட்டுள்ள பேனரில் வெற்றித் தலைவரே என்று எழுதப்பட்டுள்ளது. மொத்தமாக வெளியில் வைக்கப்பட்டுள்ள 26 பேனர்களிலும் எழுத்துப் பிழை இருப்பது மக்கள் மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேனர்கள் வைக்கும் போது தவெக நிர்வாகிகள் கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்களிடம் எழுத்துப் பிழை சரி பார்த்து பேனர் அடித்தால், விமர்சனங்களை தவிர்க்க முடியும் என்று மக்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
-
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு












Click it and Unblock the Notifications