"என் கணவரை கண்ணில் கூட காட்டவில்லை".. தவெக கரூர் மா.செ மதியழகன் மனைவி கண்ணீருடன் பேட்டி!
கரூர்: தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். மதியழகனை கைது செய்து போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை என்றும், அவருக்கு என்ன நடந்தாலும் காவல்துறை தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பலரும் நேரில் கரூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் துறையினர் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அதில் அரசியல் பலத்தை காட்டுவதற்காக விஜய் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்றும் மக்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டதன் விளைவாக, மேற்படி சம்பவத்தில் அதிக அளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ எஸ் பி பிரேம் ஆனந்த் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியில் உள்ள தவெக கட்சி நிர்வாகி வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதியழகனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் காவல்துறை எச்சரிக்கையையும் மீறி நிபந்தனைகளை கடைப்பிடிக்காதது குறித்தும் கூடுதல் எஸ்.பி. விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவெக மாவட்ட செயலாளர் மதியழகனிடம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் வாக்குமூலத்தை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதியழகனின் மனைவி ராணி, மதியழகனை கைது செய்து போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை என்றும், கூட்ட நெரிசலில் சிக்கி தானும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து நேற்று தான் வீடு திரும்பியதாகவும், தனது கணவரை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என்ற இடத்தை கூறுமாறு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் மனைவி ராணி கண்ணீர் மல்க பேசுகையில், "எனது கணவரை கைது செய்த போலீசார் தற்போது வரை எங்கு வைத்து உள்ளனர் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி நானும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து நேற்று தான் வீடு திரும்பினேன். என் கணவர் மீது சிறு கீறல் ஏற்பட்டால் கூட காவல்துறை தான் பொறுப்பு. அஜித் குமார் லாக்கப் டெத் போல என் கணவருக்கு எந்த சூழலும் ஏற்பட்டு விடக்கூடாது. என் கணவர் சட்டத்தை மதிப்பவர்" எனத் தெரிவித்துள்ளார்.
-
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது









Click it and Unblock the Notifications