Aadhav: தேர்தல் ஆணையத்தில் விஜய்க்கு விசில் சின்னம் கொடுத்தவர் யார் தெரியுமா? ஆதவ் அர்ஜுனா ஷாக்!
செங்கல்பட்டு: தேர்தல் ஆணையத்தில் உள்ள விஜய் ரசிகர்தான் கையெழுத்திட்டு நமக்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளார் என தவெக தேர்தல் பிரச்சாரக் குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அத்துடன் சிபிஐ அலுவலகத்திலும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டுள்ளார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசினார், பிறகு மொழிபோர் தியாகிகளின் வரலாறு குறித்து நாஞ்சில் சம்பத் பேசியிருந்தார். அதன்பிறகு ஜேசிடி பிரபாகரன், நிர்மலா குமார் உள்ளிட்டோர் பேசினர்.
நிர்மல் குமாரை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பேசினார். அவர் பேசுகையில், திருமாவளவன் எவ்வளவு வேண்டுமானாலும் என்னை திட்டிக் கொள்ளட்டும், ஆனால் உங்கள் கட்சி இங்க மாதிரி எவ்வளவு நாள் ஆச்சு, கட்சியில் நீங்களும் ஒரு 20 பேரும் மட்டும்தான் இருக்கீங்க.
விஜய் கட்சிக்கு சின்னம் கிடைக்காது என கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாம் கேட்ட விசில் சின்னத்தையே தேர்தல் ஆணையம் கொடுத்துவிட்டது. இது எப்படி என்பது எனக்கே ஆச்சரியம்! தேர்தல் ஆணையத்தில் உள்ள யாரோ ஒரு விஜய் ரசிகர்தான் நமக்கு விசில் சின்னத்தை கொடுக்க கையெழுத்து போட்டிருக்கிறார். அந்த நேர்மையான அதிகாரிதான் இப்படி செய்திருக்கிறார்.
டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு சிலர் வந்து விஜய்யுடன் செல்பி எடுத்தார்கள். நான் அப்போது, அண்ணே உங்களுக்கு எங்கெல்லாம் ஆள் வச்சிருக்கீங்கன்னு நெனச்சேன் என தெரிவித்தார்.
ஆதவ் மேலும் பேசுகையில், இன்றைய தேதியில் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு விஜய் நிர்ணயித்த மிக முக்கியமான நாள். மொழிப்போர் தியாகிகள் நாள். 1964-65 காலகட்டத்தில் இன்னுயிரை மாய்த்த தாளமுத்து, நடராசன், சின்னசாமி போன்றோரின் தியாகங்களை நினைவு கூர்கிறோம். தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தினமாக கொண்டாடும் இந்த நாளில், திமுகவின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து, தமிழக வெற்றி கழகம் இளைஞர்கள் மட்டுமல்ல, 2700 ஒன்றிய, நகர, வார்டு செயலாளர்களையும் உள்ளடக்கியது என்பதை நிரூபிக்கிறோம்.
70 ஆயிரம் பூத் கமிட்டி மெம்பர்ஸ்களுடன், ஒவ்வொரு பூத்திலும் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக 100 டெலிகாலர்ஸ் மூலம் எஸ்.ஐ.ஆர். பணி மட்டுமல்ல, தேர்தல் பணிகளையும் தயார்படுத்தி வருகிறோம். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , மூன்று லட்சம் பதவிகளை வெளியிட்டபோது, எதிர் கட்சிகள் சொல்வது போல் எனக்கும் ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால், நான்கு மாதத்தில் மூன்று லட்சம் பேரையும் 'மை டிவிக்கே' ஆப்பில் இணைத்தோம்.
இதன் மூலம் எஸ்.ஐ.ஆர். பணி எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. திமுக, அதிமுகவில் பிஎல்ஏ மீட்டிங் என்றால் 60,000 பேரில் 20,000, 25,000 பேர்தான் இருப்பார்கள். ஆனால், இங்கே 70,000 பேர் ரெடியாக இருக்கிறார்கள். திமுக , அதிமுக வீட்டுக்குள்ளும் நம்ம ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.
டெல்லியில் அண்ணன் நிற்கும் போது ஹிந்தியில் பேசிய பெண்கள் கூட 'மதராசி விஜய்' என்று அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அந்தளவுக்கு அவர் ரீச் ஆகியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய அமைச்சர் வீட்டிலும், எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களுடைய முன்னாள் அமைச்சர் வீட்டிலும் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள்.
திருமாவளவன் அவர்களே, நீங்கள் என்னை எவ்வளவு திட்டினாலும், உங்க கட்சி மாறி ரொம்ப நாள் ஆச்சு என்று வெளிப்படையாக தெரிவித்தார். 2016-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,"என்னை எதிர்த்து 15 கட்சிகள் நின்றாலும் நான் மக்களை நம்புறேன்" என்று சொன்னார்கள். அதேபோல் 2026-ல் 24 கட்சிகள் எங்களை எதிர்த்தாலும் மக்களை நம்புகிறோம்.
புரட்சியாளர் அம்பேத்கரையும், பெரியாரையும் இணைத்த ஒரே கட்சி தமிழ வெற்றி கழகம் தான் என்று ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக பேசினார்.
-
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
நெல்லையில் தாமிரபரணி வரலாற்றுச் சுவடுகளை மறைத்து போஸ்டர்கள்.. தவெகவினர் செயலால் சர்ச்சை -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது!












Click it and Unblock the Notifications