விஜய்யை விடுங்க! டோட்டலா திமுகவுக்கு எதிராகத் திரும்பிய தவாக வெல்முருகன்! ஷாக் ஆன தலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நவம்பர் 1 தான் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன வேல்முருகன், தமிழ்நாடு நாள் விவகாரத்தில் கடுமையான திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு நாள் கொண்டாடுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் இடையே முரணான கருத்துகள் நிலவி வருகின்றன. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று அரசியல் கட்சிகள், தமிழ்நாடு நாள் தொடர்பாக விவாதத்தைக் கிளப்பி உள்ளன.

velmurugan tamil nadu tvk

1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அரசாணை வெளியிட்டார்.

சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்ற 1968 ஜூலை 18 ஆம் தேதி அன்றைய முதல்வர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி நிலப்பரப்பு அடிப்படையில் புதிதாக உருவான மாநிலமல்ல தமிழ்நாடு. எனவே ஜூலை 18 ஆம் தேதியே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என 2022 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, ஜூலை 18 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இன்றே தமிழ்நாடு நாளை கொண்டாடி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் இன்று தமிழ்நாடு நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், இன்றுதான் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். தவாக தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர் 1 - தமிழ்நாடு நாள் விழா : தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அடையாளப்படுத்த வேண்டும்!

"தமிழ்நாடு" என்ற பெயரும், "தமிழகம்" என்ற பெயரும் பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களிலும் நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர் இனம்; தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்ற பெயர்த் தொடர்ச்சி தமிழர்களுக்கே உரியது.

சங்கரலிங்கனார் "தமிழ்நாடு" எனப் பெயர் வைக்க வேண்டும் என்பதோடு பன்னிரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநோன்பிருந்து 76ஆம் நாளில் உயிர் துறந்தார். இவையன்றிப் பல போராட்டங்கள் நடந்தன.

அதன் அடிப்படையில், அன்றைய முதலமைச்சர் அண்ணா 1967 ஜூலை 18 அன்று சட்டப்பேரவையில் "தமிழ்நாடு" பெயர் மாற்றுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து அத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

"தமிழ்நாடு நாள்" என்பதை ம.பொ.சி. மற்றும் தமிழ் உணர்வாளர்கள் நவம்பர் 1 என்று கடைபிடித்தார்கள். 1990களில் வெகுமக்கள் இயக்கமாக - கருத்தாக நவம்பர் 1ஐ தமிழ்நாடு நாள் என்று பரவச் செய்தது, ஐயா அருணாச்சலம் அவர்கள்.

இதற்கிடையில், ஜூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு நாள் என ஏற்க இருப்பதாகத் திமுக அரசு அறிவித்தது. ஆனால், அரசின் முடிவில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு உடன்பாடில்லை.

ஏனென்றால், நவம்பர் 1 - தமிழ்நாடு நாள் என்றால், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்ந்துவந்த தாயகம் நினைவுக்கு வரும். சங்க இலக்கியங்கள் நினைவுக்கு வரும். சேர, சோழ, பாண்டிய பேரரசர்கள் நினைவுக்கு வருவார்கள்.

தமிழ்நாட்டு எல்லைகளை மீட்கப் போராடிய போராளிகள் நினைவுக்கு வருவார்கள்; தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டம், கேரளத்தின் தேவிக்குளம் பீர்மேடு, கர்நாடகத்தின் கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளை, தெலுங்கர்கள் - மலையாளிகள் - கன்னடர்கள் பறித்துக் கொண்டது நினைவுக்கு வரும். இதன் மூலம், தமிழின உணர்ச்சி ஊறும்.

இவற்றையெல்லாம் மறைத்து மடைமாற்றத்தான் ஜூலை 18 என்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. இது தமிழர்களிடையே நடத்தும் உளவியல் போராகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி எண்ணுகிறது. எனவே, இனம், மொழி அடிப்படையில் தமிழர்களின் தாயகம், இந்திய ஒன்றிய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் - 1ஆம் நாளே தமிழ்நாடு நாளாக கருத வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ்நாடு அரசு மிக எழுச்சியாக- மக்கள் விழாவாக கொண்டாடும் வகையில் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்து பேசி, தமிழ்நாட்டிற்கென ஒரு கொடியை அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்கப்படும் கொடியைத் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அனைத்திலும் ஏற்றிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். இந்நிலையில், அவர் தமிழ்நாடு நாள் விவகாரத்தில் கடுமையான திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்திலும், திமுகவினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+