பனையூர் வந்த நிர்வாக குழு உறுப்பினர்கள்.. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அவசர ஆலோசனையில் 28 பேர் டீம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (அக். 29) நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் கட்சியின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை புதிதாக நியமித்தார். இந்நிலையில் இன்று நிர்வாகக் குழுவின் ஆலோசனை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட ஆனந்த், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அக்டோபர் 29 காலை 10 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. தலைவர் விஜய் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay karur

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை புதிதாக நியமித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்,

"தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க. புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது. இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு:

1. N.ஆனந்த், பொதுச்செயலாளர்
2. ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
3. K.G. அருண்ராஜ் Ex IRS. கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
4. CTR. நிர்மல் குமார், இணைப் பொதுச்செயலாளர்
5. A.ராஜ்மோகன், துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்
6. C.விஜயலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்
7. A.ராஜசேகர், தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
8. M.அருள் பிரகாசம், துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்
9. M.சிவக்குமார், மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்
10. A.பார்த்திபன், மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
11. R.விஜய் சரவணன், மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
12. M.சிவன், மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்
13. M.பாலாஜி, மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்
14. V.சம்பத்குமார், மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
15. M.சுகுமார், மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்
16. S.R.தங்கப்பாண்டி, மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
17. K.அப்புனு (எ) வேல்முருகன், மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
18. B. ராஜ்குமார், மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்
19. J.பர்வேஸ், மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
20. A.விஜய் அன்பன், கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
21. R. பரணிபாலாஜி, மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
22. V.P.மதியழகன், மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்
23. N.சதிஷ்குமார், மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்
24. K. விக்னேஷ், மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்
25. M.வெங்கடேஷ், மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்
26. S.ராஜகோபால், மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
27. S. பாலசுப்பிரமணியன், கழக உறுப்பினர் தூத்துக்குடி
28. டாக்டர். N.மரிய வில்சன், கழக உறுப்பினர் சென்னை மாவட்டம்

எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இருப்பினும், தவெக தலைவர் விஜய் ஒரு மாத காலமாக அமைதி காத்து வருகிறார். செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, தவெக தலைமையும், இரண்டாம் கட்ட தலைவர்களும் அமைதி காத்து வந்தனர். ஒரு மாத காலமாக கட்சி பணிகள் முடங்கி இருந்த நிலையில், நேற்று முன்தினம் (அக்டோபர் 27) கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். இந்நிலையில் இன்று நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

தற்போது இன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நிர்வாக குழு உறுப்பினர்கள் வந்துள்ளனர். நிர்வாகக் குழு கூட்டம் என்.ஆனந்த் தலைமையில் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. இந்த நிர்வாக குழு கூட்டத்திற்கு பின்னர் நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+