கட்சி அறிவிப்புக்கு பின் முதல் பொது நிகழ்ச்சி.. பெரியார் சிலைக்கு தவெக விஜய் நேரில் மரியாதை!
சென்னை: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேரில் மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் மாலை வைத்து, பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக பொது நிகழ்வில் கலந்துகொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். உறுப்பினர்களை சேர்ப்பது, நிர்வாகிகளை நியமிப்பது என கட்சியை சைலண்டாக பலப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து இன்று மதியம் 2.30 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு விஜய் நேரில் வருகை தந்தார். பெரியாரின் நினைவிடத்தில் பூ மாலையை வைத்து, பூக்களை தூவி விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து உடனடியாக விஜய் அங்கிருந்து புறப்பட்டு காரில் ஏறி சென்றார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்புக்கு பின்னர் முதல்முறையாக பொது நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். முன்னதாக இன்று பிரதமர் மோடிக்கும் பிறந்தநாள் வாழ்த்தை விஜய் ட்விட்டர் வழியாக தெரிவித்து இருந்தார். இதேபோன்று இதற்கு முன்பாக விஜய் ஓணத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லாததை பலரும் விமர்சித்து இருந்தனர். இதனால் அவரது கொள்கை என்னவென்றும் எந்த பாதையில் விஜய் செல்ல இருக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் விஜய் கடந்த மாதம் தவெகவின் கட்சிக்கொடி அறிமுகம் செய்து வைத்தார். அதோடு, கட்சிப்பாடல் ஒன்றையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாநாட்டை நடத்த இருக்கிறார் விஜய்.
இதில் கட்சியில் கொள்கை மற்றும் கோட்பாடுகளை விஜய் அறிவிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. விஜயின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கிறது. இந்த மாதம் நடக்க இருந்த நிலையில், ஒருசில காரணங்களால் விஜயின் தவெக மாநாடு அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications