"விஜய்க்கு தனி மெஜாரிட்டி".. தவெக 121 தொகுதிகளில் வெல்லும்.. மாஜி ஐபிஎஸ் ரவியின் எக்ஸிட் போல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு 41 சதவீத வாக்குகளுடன் 121 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்று ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி நடத்திய கருத்து கணிப்பு முடிவு வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரம் பேரிடம் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து அவர் இந்த எக்ஸிட்போல் கருத்து கணிப்பை நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தவெகவினர் குஷியாகி உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் தமிழகத்தில் அடுத்து யாருடைய ஆட்சி? என்பது தெரியவரும். இதற்கிடையே அடுத்தடுத்து எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவி மாஜி காவல்துறை அதிகாரிகளை வைத்து 234 சட்டசபை தொகுதிகளிலும் எக்ஸிட் போல் கருத்து கணிப்பை நடத்தி உள்ளார்.

இந்த எக்ஸிட் போல் கருத்து கணிப்பின் முடிவுகளை அவர் இன்று வெளியிட்டார். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

41-of-votes-for-tvk-says-former-ips-officer-ravi-conducts-opinion-poll-and-announces-results

2,340 மாஜி அதிகாரிகள்

நாம் நடத்திய எக்ஸிட் போலை போஸ்ட் எக்ஸிட் போல் அல்லது எக்ஸிட் எக்ஸிட் போல் என்று சொல்லலாம். மொத்தம் 234 தொகுதிகளை எடுத்து கொண்டோம். ஒவ்வொரு தொகுதியிலும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளை வைத்து கொண்டோம். ஒரு தொகுதிக்கு 10 பேர் என்று வைத்து கொண்டோம். மொத்தம் 2,340 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு தொகுதிகளில் 100 பேரை சந்திக்க வேண்டும்.

2.34 லட்சம் பேரிடம்...

அந்த 100 நபர்களும் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இளைஞர்கள், முதியவர்கள், பெண்களாக இருக்க வேண்டும். இப்படி எல்லா கேட்டகிரி மக்களிடம் கருத்துகள் கேட்டனர். தமிழ்நாட்டில் 2 லட்சத்து 34 ஆயிரம் நபர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

121 தொகுதிகளில் தவெக வெல்லலாம்

கிளியராக சொல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் 4.88 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 2 கோடியே 27 லட்சம் குடும்பங்களில் இருந்து ஓட்டு போட்டுள்ளனர். ரேஷன் அட்டை இருக்கும் வீடுகள் 2 கோடியே 27 லட்சம்.

இந்த கருத்து கணிப்பில் கிடைத்த ரிசல்ட்டை சாட்ஜிபிடி உள்பட பல்வேறு செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கணக்கீடு செய்தோம். கிட்டத்தட்ட 41 சதவீதம் பேர் தவெகவிற்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி பார்த்தால் தவெகவிற்கு மொத்தமாக 121 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம்.

ஆச்சரியமான தகவல்

இதில் விஷயம் என்னவென்றால் திமுக, அதிமுகவிற்கு காலம் காலமாக வாக்களித்த மக்களில் ஒருசிலர் விஜய்யின் விசில் சின்னலுக்கு வாக்களித்துள்ளனர். காலம் காலமாக இரட்டை இலை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்துவிட்டு இந்த முறை ஏன்? விசில் சின்னத்துக்கு வாக்களித்தீர்கள்? என்று கேட்டதற்கு என்னுடைய பேரக்குழந்தைகள் விசில் சின்னத்துக்கு போட சொன்னார்கள்.

விசில் சின்னத்துக்கு போடாவிட்டால் வீட்டுக்கு வர மாட்டேன். சாப்பிட மாட்டேன் என்று சொன்னதாக கூறியுள்ளனர். என்னுடைய பேரனுக்காக, பேத்திக்காக, மகனுக்காக போட்டோன் என்று நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். இது ஆச்சரியமான தகவல்'' என்று கூறியுள்ளார். இதனால் தற்போது தவெகவினர் குஷியாகி உள்ளனர்.

யார் இந்த மாஜி ஐபிஎஸ் ரவி?

இந்த எக்ஸிட் போல் கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டுள்ள ரவி ஐபிஎஸ் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மொத்தம் 31 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். 2022ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இவர் 1991ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த இவர் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் நாகப்பட்டினம், விழுப்புரம், திண்டுக்கல் ரயில்வே எஸ்பி, வடசென்னை போக்குவரத்து பிரிவின் துணை போலீஸ் ஆணையர், வடசென்னை இணை ஆணையர், சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனர், ஐஜிபி, ஏடிஜிபி நிர்வாகம் உள்ளிட்ட பல பொறுப்புகளில் செயல்பட்டவர்.

டிஜிபி அந்தஸ்தில் தாம்பரம் போலீஸ் கமிஷனராக (தாம்பரத்தின் முதல் கமிஷனர்) ஓய்வு பெற்றார். இவரும் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் கல்லூரி வகுப்பு தோழர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+