தவெக மாநாட்டில் அப்பா - அம்மாவிற்கு இடம்.. விஜய் மனைவி - மகன் மீண்டும் ஆப்சென்ட்.. சந்தேகமா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் தவெக மாநாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறும் விஜய் இந்த நிகழ்வில் மேடையில் தனது பெற்றோர்கள் சந்திரசேகர் - ஷோபாவை ஏற்றி உள்ளார்.

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு கலைநிகழ்ச்சிகள், மங்கள இசையுடன் தொடங்கி உள்ளது. பாரபத்தியில் நடைபெற்று வரும் தவெக மாநாட்டு திடலில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடி உள்ளனர்.

TVK Manadu Vijay Madurai TVK

மாநாடு பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை முடிக்க தவெக திட்டமிடப்பட்டு உள்ளது. தவெக மதுரை மாநாட்டில் விரைவாகவே விஜய் சிறப்புரை ஆற்ற உள்ளார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அவனியாபுரம் விமான நிலையம் வழியாக தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இந்த மாநாட்டுத் திடல் அமைந்துள்ளது. எலியார்பட்டி சுங்கச்சாவடியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலேயே சாலையின் இருபுறமும் தவெக கொடிகள் பறக்க, "மக்கள் விரும்பும் முதல்வர்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் அணிவகுத்து நிற்கின்றன.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநாட்டுத் திடலின் பெரும்பகுதி பச்சை விரிப்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேடை நிகழ்வுகளை அனைவரும் காணும் வகையில் 50-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மாநாட்டுத் திடல் முழுவதும் பொருத்தப்பட்டு வருகின்றன.

மதுரை தவெக மாநாடு - விஜய் பிளான் என்ன?

மதுரை பாரபத்தியில் நடக்கும் தவெக மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் என தகவல் வெளியாகி உள்ளது. . சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லாக்அப் மரணம், பரந்தூர் விமானநிலையம் போன்றவை குறித்தும் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோர் இன் - மனைவி அவுட்

மதுரையில் தவெக மாநாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறும் விஜய் இந்த நிகழ்வில் மேடையில் தனது பெற்றோர்கள் சந்திரசேகர் - ஷோபாவை ஏற்றி உள்ளார். ஆனால் நிகழ்வில் விஜயின் மனைவி சங்கீதா - மகன் சஞ்சய் ஆகியோருக்கு இடம் தரப்படவில்லை. இரண்டு பேருமே நிகழ்வில் பங்கேற்கவில்லை.

விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே விஜயின் மனைவி சங்கீதா - மகன் சஞ்சய் ஆகியோர் நிகழ்வு எதற்கும் வரவில்லை. அதோடு இவர்கள் ஒன்றாக எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே உள்ளனர். முக்கியமாக சில குடும்ப நிகழ்வுகளில், திருமண நிகழ்ச்சிகளில் கூட விஜயின் மனைவி சங்கீதா - மகன் சஞ்சய் ஆகியோர் இடம்பெறுவது இல்லை.

அதன்படியே இன்றும் விஜயின் மனைவி சங்கீதா - மகன் சஞ்சய் ஆகியோர் தவெக மாநாட்டிற்கு வரவில்லை. இது விஜய் ராசிகள் இடையே அதிர்ச்சி மற்றும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+