DMK Vaishnavi: கோவை வைஷ்ணவிக்கு கொலை மிரட்டல்! தவெக நிர்வாகி கார்த்திக்கை கைது செய்த போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

கோவை: சமூகவலைதள பிரபலம் வைஷ்ணவி, தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெகவை சேர்ந்த நிர்வாகி ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

DMK Vaishnavi

விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் பெரியளவில் உருவாக காரணம் அதில் நிர்வாகிகளாக இருந்த பலர்தான். அந்த வகையில் கோவையை சேர்ந்த 20 வயது வைஷ்ணவியும் ஒருவர்.

இவர் கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். இவர் செய்யும் பணிகளை சமூகவலைதளங்களில் பதிவுகளாக போட்டு வந்தார். இந்த நிலையில் சமூகவலைதளங்களில் போஸ்ட் போடக் கூடாது என கட்சியினர் சிலர் தனக்கு நிபந்தனை போட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவர் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் வைஷ்ணவியின் தாய், திமுகவில் இருப்பதால் அவரும் திமுகவில் இணைந்து விஜய்க்கு எதிரான பதிவுகளை போட்டு வருகிறார். கட்சி, விஜய்யின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.

கரூர் சம்பவம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் விஜய் ஆதரவாளர்கள் சிலருடன் மோதல் போக்கு ஏற்பட்டது.

சமீபத்தில், வைஷ்ணவிக்கு எதிராக தவெக ஆதரவாளர் கார்த்திக், சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மிரட்டலை விடுத்துள்ளார். "ஒரு சில பெண்களைப் பார்த்தால் மட்டும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யத் தோன்றும்" என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலான நிலையில் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+