ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற நேரத்துல குழந்தைகள் தின வாழ்த்து சொன்ன விஜய்.. நெட்டிசன்கள் கிண்டல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், குழந்தைகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் மாலை 5 மணிக்கு மேல் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
நவம்பர் 14 ஆம் தேதியான இன்று குழந்தைகள் மீது அன்பும், அக்கறையும் செலுத்திய ஜவஹர்ஹால் நேருவின் பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். இந்நாளில் நேரு கண்ட குழந்தைகளுக்கான சமூகதாயத்தை உருவாக்குவோம் என உறுதி எடுத்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

குழந்தைகள் மீது நாம் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதோடு, அவர்களுக்கு எதிர்கால சிந்தனையை புகட்டுவது மட்டுமின்றி, சமூகத்தில் குழந்தைகள் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகவும் இன்றைய தினம் உள்ளது. பல்வேறு தரப்பினரும் குழந்தைகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "வண்ணத்துப் பூச்சிகளாய்ப் பறப்பவர்கள்! வெள்ளைச் சிரிப்பினில் நம் உள்ளம் நெகிழ வைப்பவர்கள்! மழலைச் சிரிப்பினில், மனக்காயம் ஆற்றுபவர்கள் குழந்தைகள்! விலை மதிப்பில்லாத நம் செல்வங்களின் உரிமைகளை என்றும் காத்திடுவோம், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.
கள்ளம் கபடமற்ற நம் மழலைச் செல்வங்களின் கனவுகள் யாவும் நனவாக, எல்லையில்லாக் கற்பனை வானில் சிறகடித்துப் பறக்க, உங்கள் வண்ணப் புன்னகை என்றும் தொடர வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் தினத்தையொட்டி, வாழ்த்து தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், மாலை 5 மணிக்கு மேல் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
"காலையில 5 மணிக்கு அலாரம் வைங்கடான்னா சாயங்காலம் 5 மணிக்கு வச்சி இருக்கானுங்க" என நெட்டிசன் ஒருவர் கிண்டல் செய்துள்ளார். ஸ்கூல் முடிஞ்சி இப்ப தான் விர்ச்சுவல் வாரியர்ஸ் வீட்டுக்கு வருவாங்கன்னு தெரிஞ்சு கரெக்ட்டா போட்டிருக்கார்" என ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications