அஜித் குமார் மரணம்! போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி மறுப்பு
சென்னை: திருப்பவுனத்தில் காவல் விசாரணையின்போது அஜித் குமார் எனும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறையின் அத்துமீறல்தான் காரணம் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் காவல்துறையை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது சென்னை எழும்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையை கண்டித்தும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முன் அனுமதி வேண்டி காவல்துறையில் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காவல்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

வேறு ஒரு அமைப்பு முன்கூட்டியே அனுமதி பெற்றதால், தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது குதிரை கொம்பு போல இருப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டால் இழுக்கடிப்பது, அனுமதி கேட்கும் இடங்களில் கொடுக்காமல், மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்தில் அனுமதி அளிப்பது, காவல்துறையின் அதீத கெடுபிடி, கொடியை புடிக்கக்கூடாது, பேணர் கூடாது, பேரணி கூடாது, குறிப்பிட்ட கோஷங்களை எழுப்பக்கூடாது என ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை முடிந்த அளவுக்கு காவல்துறை தடுக்க பார்க்கிறது என்ற விசிக, இடதுசாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. வேண்டும் என்றேதான் தங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சோஷியல் மீடியாக்களில் தவெகவினர் புலம்பி வருகின்றனர். அதேபோல, காவல்துறையினர் உரிய காரணங்களுக்காகத்தான் அனுமதியை மறுத்திருப்பதாக எதிர் தரப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
-
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய்யின் 'நவீன் பட்நாயக் மாடல்' ஆட்சி.. அதிகாரிகளுக்கு தரப்பட்ட ஃப்ரீ ஹேண்ட்.. இதுதான் இனி ஸ்டைல்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications