"தவெக 30 சீட்களை தாண்டினால் மொட்டை அடிப்பேன்" - சவால் விட்டு சொன்னதை செய்த பிரபல சினிமா விமர்சகர்!
சென்னை: "தவெக 30 தொகுதிகளுக்கு மேல் வென்றால் மொட்டை அடிப்பேன்" என சவால் விட்டிருந்த சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, தவெக 108 தொகுதிகளில் வென்ற நிலையில் தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார். மொட்டை அடித்த புகைப்படத்தைப் பகிர்ந்து, விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் மட்டுமே வென்ற நிலையில் விஜய் தலைமையிலான தவெக, சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தவெக தலைவர் விஜய் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 118 சீட்கள் தவெக வசம் இல்லாததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சி தேர்தலில் 30 சீட் வென்றால் மொட்டை அடிப்பேன் எனக் கூறி சவால் விடுத்திருந்தார் சினிமா விமர்சகர் இட்ஸ் பிரசாந்த். விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், நெட்டிசன்கள், பிரசாந்த்தை கலாய்த்து வந்தனர். இந்நிலையில் சொன்னபடியே மொட்டை அடித்துள்ளார் பிரசாந்த்.
இதுதொடர்பாக தனது வலைதள பக்கத்தில் மொட்டை அடித்துக்கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு, "சொன்னா செய்யணும்.. தவெக தலைவர் விஜய் 30 தொகுதிகளுக்கு மேல் தாண்டிவிட்டால் மொட்டை அடிப்பேன் என்று சொன்னேன். அதன்படி இப்போது செய்துள்ளேன். விஜய் சார் நல்லபடியாக ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது செய்யுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications