சேப்பாக்கம் மைதானத்தில் விசில் அடித்தால்! சித்தரஞ்சன் சாலைவாசிகளுக்கு தூக்கம் கட்!நாஞ்சில் சம்பத்
சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விசில் சப்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் "விசில்" சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் விஜய்யின் ஆட்சி நடக்கும்! என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
எத்தனை கட்சிகள் களத்தில்..!
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் கொண்ட 4 முனை போட்டி நிலவும். வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
தேர்தல் வியூகங்கள்
அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் புதியதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.
விசில் சின்னம்
மேலும் அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த சின்னத்தை தவெகவினர் மக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறார்கள். இதற்காக விசில்களை பொதுமக்கள் கூடும் இடங்களில் வழங்கி வருகிறார்கள்.
ஆரவாரம் செய்யும் தவெக
விஜய் முதல் கட்சி நிர்வாகிகள் வரை விசில் அடித்து ஆரவாரம் செய்து வருகிறார்கள். விசில் சின்னம் எளிதான சின்னம், மக்களிடையே விரைந்து பிரபலப்படுத்திவிடலாம். மகிழ்ச்சி வந்தாலே விசில் சப்தம்தான் பறக்கும் என்பதால் இந்த சின்னத்தை யாரும் மறக்கவே முடியாது.
சென்னை சேப்பாக்கம்
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் முதல்முறையாக ரசிகர்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் பேசும் போது, விளையாட்டு போட்டிகளில் வெல்லும் போது எல்லாம் விசில் சப்தம் விண்ணை எட்டும்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
அப்படி இருக்கும் நிலையில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல முதல் முறையாக தடை செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஐடி விங் கண்டனம்
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு செல்ல தடை விதிப்பிற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக, இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். ஏன்?

விசில் சப்தம் கேட்டால் ஜுரம் வந்துடுது!
சேப்பாக்கத்தில் விசில் சத்தம் கேட்டாலே சிலருக்கு "ஜூரம்" வந்துவிடுகிறதோ? விளையாட்டு மைதானம் என்பது மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இடம். அங்கே போய் விசிலுக்குத் தடை விதிப்பது என்பது, மக்களின் கொண்டாட்ட உரிமையைப் பறிக்கும் செயல்.
விசிலை தடுக்கலாம்
மைதானத்திற்குள் வரும் விசிலைத் தடுத்துவிடலாம், ஆனால் மக்களின் மனதிற்குள் ஒலிக்கும் மாற்றத்திற்கான விசிலை யாரால் தடுக்க முடியும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட இப்படி கெடுபிடி காட்டும் இந்த நிர்வாக முறையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. மக்களின் கொண்டாட்டங்களைச் சீண்டும் இத்தகைய "விசித்திர" விதிகள், உண்மையில் ஆட்சியாளர்களின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. நீங்கள் பிடுங்குவது விசிலை அல்ல, ரசிகர்களின் உரிமையை!
வெற்றி விசில் சப்தம்
நாளை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் மக்கள் போடப்போகும் "வெற்றி விசில்" சத்தத்தில், இப்போதைய ஆட்சியாளர்களின் தூக்கம் நிச்சயம் கலைந்து போகும்! இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
விஜய், சுந்தர் சியின் முடிவு.. சூழ்ச்சி இருக்கு! சொல்லுறதை நம்ப முடியல! ரகசியங்களை உடைத்த நடிகர் இளவரசு -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்












Click it and Unblock the Notifications