தவெகவில் தொடரும் அதிருப்தி.. பதவி கிடைக்காமல் தவிக்கும் முன்னாள் அதிமுக புள்ளிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது உள்கட்சி சலசலப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. தவெக கட்சி தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தவெகவை நோக்கிப் படையெடுத்தனர்.

ஆனால், இப்போது அவர்கள் அனைவரும் தவெக கட்சியில் எந்தவொரு பொறுப்பும் இன்றி ஓரங்கட்டப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளன.

TVK upset

கட்சி தாவல்

அதிமுகவின் தூண்கள் எனக் கருதப்பட்ட பல முக்கியத் தலைவர்கள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு உள்ளனர். மூத்த தலைவர்களான எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி ஆகியோருடன் முன்னாள் எம்பி இளவரசன் மற்றும் சுந்தர்ராஜ், ராஜமுத்து, ராஜவர்மன், பன்னீர்செல்வம், முருகன், என். சிவா போன்ற முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் போன்ற அக்மார்க் அதிமுக முகங்களும் தவெக கொடியைப் பிடித்தனர். இப்படிக்கு மொத்தமாக 8 முன்னாள் அமைச்சர்கள், 1 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணைந்தனர்.

ஆனால், இந்த மாபெரும் கட்சித் தாவல் நடந்து ஒரு மாதத்தைக் கடந்துவிட்ட நிலையிலும், இணைந்துள்ள தலைவர்களுக்கு இதுவரை எந்தவொரு உட்கட்சிப் பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பதுதான் தற்போதைய பிரதான பிரச்சனை. மாநில அளவிலோ, மண்டல அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ புதிய நிர்வாகிகளுக்கான பதவிகள் எதையும் தவெக தலைமை இன்னும் அறிவிக்கவில்லை.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கேபினெட் அமைச்சர்களாகவும், மாவட்டத் தளபதிகளாகவும் வலம் வந்து அதிகாரத்தை அனுபவித்த இந்த அனுபவமிக்க தலைவர்கள், இப்போது தவெகவில் வெறும் சாதாரண தொண்டர்களைப் போல நடத்தப்படுவதாகக் வேதனை தெரிவிக்கின்றனர்.

என்ன நடக்கிறது கட்சியில்?

ஆரம்பக் கட்டமாக 6 எம்எல்ஏக்கள் தவெகவில் ஐக்கியமாகியுள்ள நிலையில், இது வெறும் ஆரம்பம்தான் என்ற அதிரடித் தகவல் தற்போது கசிந்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மேலும் பல முக்கிய மாவட்டச் செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் தவெகவை நோக்கி நகரத் தயாராகி வருகின்றனர்.

இவ்வாறு அடுத்த அலையாகத் தவெகவில் இணையக் காத்திருக்கும் மாற்றுக்கட்சித் தலைவர்களை பிரம்மாண்டமான முறையில் வரவேற்க முதலமைச்சர் விஜய் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார். இதனால், சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையில் மேலும் சில ராஜினாமாக்கள் கியூவில் வரிசைகட்டி நிற்பதாக கூறப்படுகிறது.

ஆனால் மாற்றுக்கட்சியினர் தவெகவை நோக்கி படையெடுத்து வரும் அதே வேளையில், கட்சித் தலைவர் விஜய் அவர்களுக்கு மிகத் தெளிவான, கறாரான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னிடம் பேசிய மூத்த நிர்வாகிகளிடம், "ஏற்கனவே வந்தவர்கள் தவிர.. இனி கட்சிக்குள் வரும் புதியவர்கள் எவரும் உடனடியாக பெரிய அமைச்சரவைப் பதவிகளையோ, கட்சியில் பெரிய பொறுப்புகளையோ அல்லது தங்களின் செல்வாக்கைக் காட்டும் பிரம்மாண்ட போஸ்டுகளையோ எதிர்பார்க்கக் கூடாது" என்று விஜய் கறாராகக் கூறிவிட்டாராம்.

கோபமான நிர்வாகிகள்

அதுமட்டுமின்றி, கட்சியின் முக்கியமான வியூக ஆலோசனைக் கூட்டங்கள், கொள்கை முடிவுகள் எடுக்கும் நிகழ்வுகள் மற்றும் பொது மேடைகளில் இந்த மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதையோ, முன்னுரிமையோ தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தங்களது பல ஆண்டு கால அரசியல் அனுபவமும், மக்கள் செல்வாக்கும் புதிய கட்சியில் முற்றிலும் வீணடிக்கப்படுவதாகக் கருதும் இந்த தலைவர்கள், தங்களது ஆதரவாளர்களிடம் தங்களுக்கு நேர்ந்துள்ள இந்த அரசியல் முட்டுக்கட்டை குறித்துப் புலம்பி வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புடன் தவெகவுக்கு வந்த அதிமுக புள்ளிகள், இப்போது அதிகாரமும் பொறுப்புகளும் இன்றி தவித்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+