Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆளே நமக்கு ஆதரவா பேசிட்டாரு.. திமுகவில் என்னால் பெரிய குழப்பம்.. அடித்து சொன்ன விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய் பேச்சு

இதில் பேசிய விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களிடம் செல் என்று கூறிய அண்ணாவை மறந்தது யார்? அண்ணா ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும்; தி.மு.க.,வினருடன் த.வெ.க.,வினருக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகராறும் இல்லை; தி.மு.க.,வினருக்கு வேண்டுமானாலும் த.வெ.க மீது தனிப்பட்ட வன்மம் இருக்கலாம்; தி.மு.க மீது த.வெ.க.,விற்கு எப்போதும் தனிப்பட்ட வன்மம் இல்லை.

TVK Vijay

நமக்கு கொள்கை இல்லையாம்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கோட்பாட்டை அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? எல்லாருக்கும், எல்லாமும் கிடைக்கணும். சமூகநீதி கிடைக்கணும், அந்த சமூகநீதி உண்மையான சமூகநீதியாக இருக்கணும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற சொன்ன நமக்கு கொள்கையில்லையா?

அண்ணா ஆரம்பித்த கட்சியை அதற்குப் பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் பண்றாங்க என்று நான் சொல்லி தான் தெரிய வேண்டுமா? தனிப்பட்ட முறையில் எனக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது; அவர்களுக்கு என் மீது வன்மம் இருக்கலாம்.

நமக்கு எல்லாமும் கொடுத்த மக்களுக்காக எல்லா நல்லதையும் செய்யணும். அதுவும் சட்டப்பூர்வமாக செய்யணும், அங்கீகாரத்துடன், அதிகாரப்பூர்வமாக செய்யணும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரே மாதிரி செய்யணும். ஒரே எண்ணத்துடன் செய்யணும். இந்த ஒரே லட்சியத்துக்காகத் தான் நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.

நமக்கு வாக்களிக்கும் நண்பா.. நண்பிகள்.. ஜென் ஜி கிட்ஸ் எல்லோரும் தற்குறிகள் என்று இவர்கள் சொல்கிறார்கள்.. இப்போது அறிவுத்திருவிழாவில் நிலைப்பாட்டை மாற்றி உள்ளனர்.. அதாவது அவதூறு திருவிழாவில் தற்குறி என்று இனி சொல்லாதீர்கள் என்று புதிய நிலைப்பாடு வேறு எடுக்கிறார் ஒரு திமுக எம்எல்ஏ. அவர் வேறு யாரும் இல்லை நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாளின் உறவினர்தான் அவர்.

திமுக உள்ளேயே ஒருவர்தான் தவெக பக்கம் ஸ்டாண்டு எடுத்ததை பார்த்தது.. இவர்களுக்கு சந்தேகம். என்ன நம்ம ஆள் ஒருத்தர் தவெகவிற்கு ஆதரவாக பேசுகிறாரே என்ற கோபம். சந்தேகம். திமுக உள்ளே இப்போது என்னால் பெரிய குழப்பமே ஏற்பட்டுவிட்டது, என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.

விஜயை சந்தித்த மக்கள்

35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2000 பங்கேற்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட கலந்துகொண்டார்கள். பங்கேற்பாளர்கள் தங்களின் குறைகளை விஜயிடம் நேரடியாக எடுத்துரைத்தனர் .

இதையடுத்து தனி அரங்கில் விஜய், தமிழக வெற்றிக் கழக தொண்டரணி உறுப்பினர்களையும் சந்திப்பார். இந்த உறுப்பினர்களுக்கு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளால் கூட்ட மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தினமும் சுமார் 100 தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. காவல்துறை ஆட்சேர்ப்புக்கான தகுதி மற்றும் உடல் தகுதி விதிமுறைகளைப் பின்பற்றி இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தொண்டர் படை தயார்

தமிழக வெற்றிக் கழக தொண்டர் படை இதன் மூலம் தயார் செய்யப்படும். முதல் கட்டப் பயிற்சி முடிந்ததும், மாவட்ட அளவிலான முகாம்கள் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் நிகழ்ச்சிகளை இதற்கு முன் ஒருங்கிணைத்த மாவட்டக் குழுக்கள், பெரிய கூட்டங்களை நிர்வகிப்பதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து மற்ற பிரிவுகளுக்கு விளக்கமளிக்கும். அதாவது விஜய் கலந்து கொள்ளும் கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும் என்று பயிற்சிகள் இதன் மூலம் வழங்கப்படும்.

விஜய் அமைக்கும் குழு

இந்த நிலையில்தான் தவெக கட்சிக்கு ஆலோசனை வழங்க புதிய குழுவை விஜய் உருவாக்க உள்ளாராம். பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட, ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக்குழுவை அவர் அமைக்கவுள்ளார்.

இந்தக் குழுவில், முன்னாள் காவல்துறை இயக்குனர் (DGP) மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குனர் (ADGP) உட்பட 18 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இடம்பெறுவார்கள். கரூர் விவகாரம் போன்ற சம்பவங்கள் இனி நடப்பதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்த தகவலறிந்த வட்டாரங்களின்படி, இந்தக் குழுவின் முதன்மைப் பணி, பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு திட்டமிடல் குறித்து கட்சியின் தொண்டர்களுக்கு பயிற்சி அளித்து, வழிகாட்டுவதாகும். விஜய்யின் பொது ஈடுபாடு அதிகரித்து வருவதால் இனி அவர் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருக்கும். இதனால் மக்கள் அதிக அளவில் கூட வேண்டி இருக்கும். அதை எல்லாம் சமாளிக்க திட்டமிடல் அவசியம். இதையடுத்தே இந்த குழுவை விஜய் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பல ஆண்டு கால அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள், அச்சுறுத்தல் மதிப்பீடு, நேரத்தை கடைபிடித்தல், மேடைப் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை போன்ற விவகாரங்களில் சிறப்புப் பயிற்சிகளை வழங்குவார்கள். அரசு வழங்கும் பாதுகாப்பை மட்டும் நம்பி இருக்காமல், விஜய்க்கு ஏற்றபடி கூட்டங்களை திட்டமிடுவது அவசியம் என்று கருதி தவெக இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+