Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் எடுத்த சர்வே! ரிப்போர்ட்டை திறந்து பார்த்தால்.. தங்கம் மாதிரி கிடைத்த பதில்! ட்விஸ்ட் இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனியாக ஒரு ஏஜென்சியை வைத்து முக்கியமான சர்வே ஒன்றை எடுத்து உள்ளாராம். இந்த சர்வேயில் முக்கியமான பல தகவல்கள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2-3 மாதங்கள் விஜய் வாழ்க்கையில் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்துவிட்டன. விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி முடித்துவிட்டார். அதன்பின் அவர் ஷூட்டிங் எதிலும் பங்கேற்கவில்லை. அதன்பின்தான் கரூர் சம்பவம் நடந்துவிட்டது. கரூர் சம்பவம் விஜயை அப்படியே முடக்கி போட்டது.

கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் விஜய். பெரிதும் வெளியே செல்லாமல் அமைதியாக இருந்தார். அதன்பின் விஜய், மாமல்லபுரத்தில், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், விஜய் திடீரென பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

TVK Vijay did a major survey on the political prospects of the party The results are major twists

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் மேடை முன் கூடுமாறு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். குடும்பத்தினர் ஒன்றுகூடியபோது, அவர் கைகளைக் கூப்பி, கண்ணீருடன் அவர்களைப் பார்த்தார். அனைத்து குடும்பங்களும் தனக்கு முன் நின்றபோது, விஜய் திடீரென குனிந்து, தனது நெற்றியை தரையில் தொட்டு, நடந்த சம்பவத்திற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த மக்கள் அமைதியாகினர்.

சில குடும்ப உறுப்பினர்கள் அழத் தொடங்கினர், சிலர் அவரைத் தூக்க விரைந்தனர். இதுபோன்ற ஒரு துயரம் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்வதற்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் விஜய் அவர்களிடம் கூறினார்.

விஜய் செங்கோட்டையன்

இதன் பின் கரூர் துயரில் இருந்து மீண்டு வந்த விஜய் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் அரசியல் அறிக்கைகள், கூட்டங்களை நடத்த தொடங்கி உள்ளார். அவரின் அரசியலின் ஒரு கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் திடீரென தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். தவெகவில் இணையும் முன் நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்ற கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விஜய் எடுத்த சர்வே

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த 2 வாரமாக விஜய் ஒரு சர்வேவை ரகசியமாக எடுத்துள்ளாராம். விஜய் ரகசியமாக.. சர்வதேச ஒரு ஏஜென்சியை வைத்து சர்வே எடுத்துள்ளார். அந்த சர்வேயில் சில சுவாரசியமான தகவல்கள் இருந்ததால் அதை பார்த்து விஜய் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்து உள்ளாராம்.

அதன்படி கொங்கு மண்டலத்தில் விஜயின் வாக்கு சதவிகிதம் 20-25 சதவிகிதம் வரை உயரலாம் என்று அந்த சர்வேயில் கூறப்பட்டு உள்ளதாம். டெல்டாவில் 15 சதவிகிதம் வரை வாக்குகள் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளதாம். தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களிலும் 20 சதவிகிதம் வரை வாக்குகள் இருக்கும் என்றும் சர்வே கூறுகிறதாம்.

அதன்படி தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இப்போதே வாக்கு சதவிகிதம் 20 வரை இருக்கிறது என்றால்.. அடுத்த 5 மாதங்களில் இதை இன்னும் 5 சதவிகிதம் வரை உயர்த்தலாம் என்று விஜய் நிமிர்ந்து நிற்க தொடங்கி உள்ளாராம். இந்த ரிப்போர்ட் காரணமாக விஜய் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். கடந்த 2-3 மாதங்களாக பெரிதாக மகிழ்ச்சியாக இல்லாத விஜய் .. செங்கோட்டையன் வருகை.. சர்வே ரிப்போர்ட் காரணமாக பிளாஸ்ட்டு பிளாஸ்டு என்று சந்தோசமாக இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+