புஸ்ஸியை லெப்ட் ஹேண்டில் ஒதுக்கி தள்ளிய விஜய்.. கண்டுகொள்ளவே இல்லையே.. தவெகவில் மொந்தா புயல்!
சென்னை: கடந்த மாதம் கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் தங்கள் உறவினர்களை இழந்த ஒரு குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று சந்தித்தார். சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்துப் பேசினார்.
கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், விஜய் தங்களைச் சந்தித்தபோது வருத்தம் தெரிவித்ததாகவும், கரூர் வந்து சந்திக்க முடியாததற்கு மன்னிப்புக் கோரியதாகவும் குறிப்பிட்டனர். "எங்கள் குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறினார். ஆனால், குழந்தைகளை இழந்த நிலையில், நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை" எனப் பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெற்றோர் ஊடகத்திடம் தெரிவித்தனர்.

விஜய் நேரடியாக சந்திப்பு
செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் நடந்த கூட்ட நெரிசலில், 16 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். எனினும், அங்கே கூட்டம் கூட காரணமாக இருந்த நடிகர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நேரடியாகச் சந்தித்துப் பேசியது இதுவே முதல்முறை.
கரூர் கூட்ட நெரிசலில் உறவுகளை இழந்த 38 குடும்பங்களில், 37 குடும்பங்கள் சென்னைக்கு வந்து விஜய்யைச் சந்தித்தன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக, தனியார் விடுதியில் 46 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய சந்திப்பு மாலை 6:30 மணி வரை நீடித்தது.
"நாங்கள் அனைவரும் ஒரு அரங்கில் அமர்ந்திருந்தோம். விஜய் ஒரு தனி அறையில் இருந்தார். ஒவ்வொரு குடும்பமாகச் சென்று அவரைச் சந்தித்தனர். அவர் எங்களுடன் அரை மணி நேரம் பேசினார். சிலர் சீக்கிரமாகவே சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தனர்," எனப் பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒருவர் தெரிவித்தார்.
விஜய் சந்திப்பு - ஓரம்கட்டப்பட்ட புஸ்ஸி ஆனந்த்
நேற்று இந்த நிகழ்வு முழுக்க புஸ்ஸி ஆனந்த் ஓரம் கட்டப்பட்டார். அவருக்கு எங்குமே இடம் கொடுக்கப்படவில்லை. புஸ்ஸி ஆனந்த் மொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தார். விஜய் புஸ்ஸி ஆனந்த் மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதை விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
அதோடு கட்சியை சரியாக கட்டமைக்கவில்லை. கட்சி நிர்வாகிகளை சரியாக தேர்வு செய்யவில்லை. கட்டமைப்பில் சொதப்பிவிட்டார் என்றெல்லாம் புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கோபத்தில் இருக்கிறாராம். இதன் காரணமாக நேற்று நிகழ்வில் புஸ்ஸி ஆனந்த் உடன் விஜய் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது.
விஜய் பேசியது என்ன?
நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் பேசிய விஜய்.. தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக விஜய் உறுதியளித்திருக்கிறார். பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு பெற்றோர், நடிகர் விஜய் தனக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகக் கூறினார். "நான் உங்கள் சகோதரன் போன்றவன். உங்கள் குடும்பத்திற்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் கேட்கலாம். வேலை வேண்டுமானால் அல்லது இடத்தை மாற்ற விரும்பினால் கூட நான் செய்கிறேன்," என்று விஜய் கூறியதாக அந்த பெற்றோர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக விஜய் அறிவித்திருந்தார். இந்தத் தொகை குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் தரப்பில் இந்தச் சந்திப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியாகவில்லை.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி












Click it and Unblock the Notifications