கொடூர குணம் கொண்ட விஜய்.. லட்சக்கணக்கான இளைஞர்கள் மாட்டி இருக்கின்றனர்.. அருள்மொழி கருத்து!
சென்னை: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கொடூர குணம் கொண்ட விஜய்யிடம் மாட்டிக் கொண்டிருப்பதாக திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி விமர்சித்துள்ளார். ப்ளூ வேல் போன்ற ஆபத்தான கேமில் குழந்தைகள் சிக்கியதை போல், இளைஞர்கள் ஆபத்தான மனிதர்களிடம் சிக்கி இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தவெகவின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கரூரில் அசம்பாவிதம் நடந்தபின், உடனடியாக தனி விமானம் மூலமாக சென்னை திரும்பிய விஜய், 4 மணி நேரம் கழித்து ஒரு இரங்கல் பதிவை வெளியிட்டார்.

அதன்பின் அமைதியோ அமைதி நிலைக்கு சென்ற விஜய், 3 நாட்களுக்கு பின் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவிலும் கூட கரூர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்காமல், சிஎம் சார்.. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று விஜய் பேசி இருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சிற்கு அவரது கட்சி நிர்வாகிகளே கடுமையான விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் வீடியோ தொடர்பாக திராவிடர் கழகம் வழக்கறிஞர் அருள்மொழி பேசுகையில், கொடூர குணம் கொண்ட மனிதரிடம் லட்சக்கணக்கான குழந்தைகாள் மாட்டிக் கொண்டுள்ளனர். எப்படி ப்ளூ வேல் என்ற ஆபத்தான கேமில் குழந்தைகள் சிக்கினார்களோ, அப்படி ஒரு ஆபத்தான மனிதரிடம் சிக்கியுள்ளனர்.
அந்த கேமை இயக்குபவர்கள் யார் என்று தெரியாது. மக்கள் மீது அக்கறை உள்ளவர்களுக்கு அதை இயக்குபவர்கள் மீது எப்படி பயம் வருமோ, அது மாதிரியான அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. விஜய்யின் வீடியோவுக்கு யாரோ வசனம் எழுதி கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றும் முயற்சியில் விஜய்யை யாரோ இயக்கிறார்கள்.
விஜய்யின் வீடியோ நன்றாக வசனம் எழுதப்பட்டு பயிற்சி செய்து பதிவு செய்யப்பட்ட ஒன்று. உயிரிழந்த 41 பேர் குறித்து விஜய்யிடம் எந்தவொரு பரிதவிப்பும் இல்லாமல் விஜய் இருக்கிறார். எந்தவொரு பதற்றமும், குற்றவுணர்ச்சியும் விஜய்யிடம் இல்லை. நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பாகவே உள்ளது. நாங்கள் திரும்பி வருவோம்..
பழிவாங்கும் எண்ணம் போன்ற வார்த்தைகள் எல்லாம் என்ன மாதிரியான பேச்சு.. விஜய் இதனை தாமாக செய்யவில்லை. மொத்த பாஜக கூட்டமும் விஜய்யை காப்பாற்றுவதற்காக களமிறங்கி இருக்கிறது. விஜய்க்கு பின்னால் இருப்பவர்கள் யார்? அவரை காப்பாற்ற களமிறங்கி இருப்பவர்கள் யார்? ஆபத்தான விளையாட்டில் தவெக மற்றும் பாஜகவினர் இறங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!









Click it and Unblock the Notifications