ஜனநாயகன் படம்.. வெளியேற வருவது சந்தேகம்தான்.. காசை திருப்பி கேட்கும் விநியோகஸ்தர்கள்? போச்சு
சென்னை: நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியைத் தொடங்கிய பிறகு, அவரைச் சுற்றிப் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவரது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் முதலில் ஆரவாரம் செய்தாலும், திரையுலகில் அவருக்கு புதிய சவால்கள் உருவெடுத்துள்ளன. ஜனநாயகன் படம் அவரின் கடைசி படம் என்று சொல்லப்பட்டாலும் கூட.. படம் இன்னும் வெளியாகவில்லை.
படத்தின் சென்சார் பிரச்சனை ஆகி உள்ளதால் படம் வெளியாவது சிக்கலாகிவிட்டது. இனி பெரிதாக பண்டிகை காலம் இல்லை, தேர்வு காலம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இன்னும் கிடைக்கவில்லை. இது அவரது சினிமா எதிர்காலத்தைக் குறித்த ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரீமேக் படம் ஜனநாயகன்
விஜய்யின் வரவிருக்கும் திரைப்படம் 'ஜனநாயகன்'. இந்த படம் தெலுங்கில் வெளியான பாலய்யா படத்தின் ரீமேக். படத்தின் கதையில் பல மாற்றங்களுடன் இந்த படத்தை எடுத்துள்ளனர். இப் படத்தின் மீது முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்கள், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர். விஜய்யின் முந்தைய படங்களுக்கு எப்போதுமே வலுவான தொடக்க வசூல் கிடைத்ததைக் கருத்தில் கொண்டு, இந்தப் படமும் சாதனை படைக்கும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
ஜனநாயகன்படத்தின் எதிர்பார்ப்பு குறைந்தது
ஆனால், விஜய்யின் அரசியல் வருகைக்குப் பிந்தைய சூழல் முற்றிலும் மாறிவிட்டது. விஜய்யின் அரசியல் நகர்வுகள் படத்தின் வரவேற்பையும் வசூலையும் பாதிக்கலாம் என அஞ்சிய சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள், ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினர். இதனால் தயாரிப்பாளர் KVN மற்ற விநியோகஸ்தர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முந்தைய மதிப்பைவிட மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை குறைவான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு ஷாக்
அதோடு இப்போது படம் வெளியாவதில் சிக்கல் உள்ளது. படம் சமயத்தில் அமேசானில் வந்தால் கூட வந்துவிடும். இதனால் ஆந்திரா, தெலுங்கானாவில் படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களும் படம் விநியோகஸ்த்தில் இருந்து வெளியேற அளித்தல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் மாற்றம் விஜய்யை மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தனது வாழ்க்கையில் சினிமா தனக்கு அன்பு, புகழ் மற்றும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வழங்கியது என்பதை அவர் நினைத்துப் பார்த்து வருகிறாராம். அரசியல் பிரவேசம் தனது படங்களுக்கான மரியாதையையும் வியாபாரத்தையும் நேரடியாகக் குறைக்கும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. 'ஜனநாயகன்' ஜனவரியில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இனி அது சாத்தியம் இல்லை. தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதும், படத்தின் மீதான ஆர்வம் குறைவதும் அவருக்கு கவலையை அளிக்கிறதாம்.
தனது அரசியல் பயணம் முழுமையாகத் தொடங்குவதற்கு முன்பே சினிமா வாழ்க்கை பாதிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. வருங்காலம் குறித்து கவலைப்பட்ட விஜய், என்ன செய்யலாம் என்பது பற்றி தீவிரமாகச் ஆலோசனைகள் செய்து வருகிறாராம்.
ஜனநாயகன் என்ன பிரச்சனை?
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு 'யு/ஏ 16+' சான்றிதழ் விவகாரம் தொடர்பாக, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி) தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, 2026 ஜனவரி 20 அன்று ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய இந்த அமர்வு வழக்கை நேற்று விசாரித்தது.
சி.பி.எஃப்.சிக்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனும், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பிக்காக மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர் வாதிட்டனர். சி.பி.எஃப்.சி பெற்ற இடைக்காலத் தடையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் தலையிட மறுத்ததோடு, விரைவு முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வை கேட்டுக்கொண்டது.
ஜனநாயகன் வழக்கு பின்னணி
சி.பி.எஃப்.சியின் ஆய்வு குழு டிசம்பர் 19, 2025 அன்று திரைப்படத்தைப் பார்வையிட்டு, திருத்தங்களுடன் 'யு/ஏ 16+' சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தது. தயாரிப்பாளர்கள் திருத்தங்களை செய்து டிசம்பர் 24 அன்று மீண்டும் சமர்ப்பித்தனர். எனினும், ஓர் உறுப்பினரின் புகாரின் அடிப்படையில், சி.பி.எஃப்.சி டிசம்பர் 29 அன்று சான்றிதழ் நடைமுறையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, ஜனவரி 5, 2026 அன்று படத்தை மறுஆய்வுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் ஜனவரி 6 அன்று ரிட் மனு தாக்கல் செய்தது. ஒற்றை நீதிபதி பி.டி. ஆஷா, ஜனவரி 9 அன்று சி.பி.எஃப்.சி தலைவரின் முடிவை ரத்து செய்து, உடனடியாக யு/ஏ 16+ சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சி.பி.எஃப்.சி இரு நீதிபதிகள் அமர்வில் அவசரமாக மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றது.
நீதிபதி ஆஷா தனது உத்தரவில், ஆய்வுக் குழுவின் ஒருமனதான பரிந்துரை, தயாரிப்பாளர்களின் திருத்தங்கள் பற்றி குறிப்பிட்டார். "புகார் அளித்தவரின் குறை, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பது, உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது," என்று அவர் எழுதினார். "பரிந்துரைத்த உறுப்பினர் திடீரென மனமாற்றம் பெறுவது, சி.பி.எஃப்.சி முடிவின் நம்பகத்தன்மையை அரிக்கச் செய்யும் ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும்," என்றும் அவர் எச்சரித்தார்.
-
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
ரூ.500+ கோடிக்கு சொத்து இருக்கு.. ஆனாலும் ரூ.67,000க்கு TVS XL வாங்கிய விஜய்.. என்ன காரணம் தெரியுமா -
விஜய்யின் சொத்து விவரம் வெளியானது.. ரூ.400+ கோடி சொத்து, வங்கிக் கணக்குகளில் ரூ.370+ கோடி சேமிப்பு -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
Vijay: "எனக்காக விட்டு கொடுத்து இருக்காரு" கட்டி பிடித்து விஜய் சொன்ன அந்த வார்த்தை! யார் இந்த சிவா? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications