வரும் தேர்தலில் விஜய்யால் போட்டியிட முடியாதா? மனைவி சங்கீதா வைக்கும் செக்? லிஸ்ட்லயே இல்லாத ட்விஸ்ட்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டிருப்பதன் காரணமாக விஜய் வரும் தேர்தலில் போட்டியிடாத முடியாத நிலை கூட வரலாம் என்ற தகவல் பரவி வருகிறது. அப்படி என்னதான் பிரச்சினை.. இது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி பேசுவதாக தகவல் வெளியான நிலையில், 234 தொகுதிகளிலும் தவெக தனித்தே போட்டியிட இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் உறுதி செய்துள்ளனர்.

விஜய் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
தவெகவில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணலையும் விஜய் நடத்தி முடித்துள்ளார். தவெக தலைவர் விஜய், திருச்சி, நாகையில் போட்டியிடலாம் என்று முதலில் அக்கட்சியினர் மத்தியில் பேசப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதக தற்போது தகவல் பரவி வருகிறது. பெரம்பூர் தொகுதியில் ஏசி வசதி கொண்ட தேர்தல் பணிமனையும் அமைக்கும் பணியை தவெக தொடங்கியுள்ளது.
இதனால், விஜய் பெரம்பூரில் தான் போட்டியிடுவார் என்று அக்கட்சியினர் அடித்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கிடையே, விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, விஜய் தனது வேட்புமனு தாக்கல் செய்யும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். இதில்தான் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சொத்து விவரங்களை தாக்கல் செய்யனும்
விஜய்யின் மனைவி சங்கீதா சமீபத்தில் அவரிடம் இருந்து விவாகாரத்து கோரியுள்ளார். விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாகவும் தனது விவாகரத்து மனுவில் கூறியிருந்த சங்கீதா, தனது கணவரின் சமூக அந்தஸ்து, சொத்து மதிப்புக்கு ஏற்ப நிலையான ஜீவனாம்சம் தர வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
மேலும் விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் தங்கியிருக்க தனக்கு அனுமதி வேண்டும் என்றும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். சங்கீதா தொடர்ந்த இந்த விவாகரத்து வழக்கு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தற்போது சிக்கல் என்னவென்றால், விஜய் வேட்பு மனு தாக்கலில் தனது சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பு மனுவை தள்ளுபடி செய்யும் நிலை வரலாம்
விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே விஜய் தனது மனுவில் மனைவியின் சொத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டியிருக்கும். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் சங்கீதாவின் விவரங்களை குறிப்பிடுவதில் குளறுபடி ஏற்பட்டால், வேட்பு மனு தள்ளுபடி செய்யும் நிலை கூடும் வரலாம்.
அப்படி நடந்தால் விஜய்யால் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். எனவே இது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
விஜய்க்கு கடும் நெருக்கடி
விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், 27 ஆண்டுகள் மண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாகவும், தன்னை அலட்சியப்படுத்தியதகவும் விவகாரத்து மனுவில் சங்கீதா கோரியுள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நடிகராகவும், அரசியலில் கால் பதித்துள்ள விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் வீசியுள்ள இந்த புயல், சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் என அடுத்தடுத்து நெருக்கடியை மேற்கொண்டு வரும் நிலையில் மனைவியின் விவாகரத்தும் அவருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications