திருச்செந்தூரில் விஜய் போட்ட பிளான்.. நிர்வாகிகளால் வந்த முட்டுக்கட்டை.. மாட்டிய புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை திருச்செந்தூரில் இருந்து தொடங்க நினைத்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்னும் நிர்வாகிகளே நியமனம் செய்யப்படாதது குறித்து கூறப்பட்டுள்ளது. இதனால் புஸ்ஸி ஆனந்த் மீது கடுமையான கோபத்தில் விஜய் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் மீண்டும் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதன் முதல் அடியக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் சுமார் 2 ஆயிரம் பேரை விஜய் சந்திக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தவெக தலைமை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே டிசம்பர் 4ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்திருந்தர்.

ஆனால் கார்த்திகை திருநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால், மாற்று தேதியை தேர்வு செய்து கொடுக்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய் தரப்பில் மாற்று தேதியை முடிவு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதனிடையே ஜேப்பியார் கல்லூர் வளாகத்தில் மக்களை சந்திக்க ஆதவ் அர்ஜுனா தரப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
மரிய வில்சன் மூலமாக ஆதவ் அர்ஜுனா இந்தப் பணிகளை செய்திருக்கிறார். இதனால் புஸ்ஸி ஆனந்த்-க்கு கூடுதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தென் மாவட்டங்களில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க திட்டமிருந்திருக்கிறார். மீனவர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து பயணத்தை தொடங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் திருச்செந்தூரில் அதற்கான பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த்-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு இதுவரை தவெக தரப்பில் ஒரு மாவட்டச் செயலாளர் கூட நியமனம் செய்யப்படவில்லை.
இது விஜய்யின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. இதனால் டென்ஷனான விஜய், சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் போது, இன்னும் நிர்வாகிகளை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கொந்தளித்துள்ளார். இதன்பின்னரே தவெக கொஞ்சம் வலிமையாக உள்ள சேலம் மாவட்டம் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications