கடுப்பான எடப்பாடி! விஜயின் குரலாக பேசினாரே! தவெகவை விட்டு விளாச தொடங்கிய அதிமுக! ஒரே இரவில் ட்விஸ்ட்
சென்னை: தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கூட்டணி பற்றி முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படும் என்று தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கூட்டணி நிலைப்பாட்டில் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம் நிறைவேறியது.

தமிழகம் முழுவதும் கோடானு கோடி மக்களின் பேராதரவைப் பெற்று, முதன்மைச் சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்றும். தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தைக் கழகத் தலைவர் அவர்களுக்கே வழங்கி, இச்சிறப்புப் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது., என்று கூறப்பட்டது.
விஜய்தான் முதல்வர் வேட்பாளர்
விஜய் தலைமையில்தான் தவெக தேர்தலை சந்திக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இன்று நடந்த கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவெக முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தமிழக வெற்றிக் கழக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக அப்செட்
தவெகவின் இந்த முடிவு அதிமுக தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
போன் கால் பேச்சு
ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியானது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் நம்மிடம் பேசுகையில்.. கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.
அப்செட்டான அதிமுக
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜயின் அறிவிப்பால் அதிமுகவினர் கடுமையாக அப்செட் ஆனார்கள். முக்கியமாக கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவினர் ஊடகங்களில் பேசி வந்தனர். தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். விஜயை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக தவெக நிர்வாகிகளை விட கடுமையான கருத்துக்களை அதிமுகவினர் பல ஊடகங்களில் வைத்தனர். விவாதங்களில் பேசினர்.
எடப்பாடி பழனிசாமியே.. விஜயின் குரலாக சட்டசபையில் பேசினார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பேசுகையில், ஒரே இரவில் 39 சடலங்களுக்கு உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) எவ்வாறு நடத்தப்பட்டது என்றும், ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சென்று கள்ளச்சாராயத்தில் பலியான நபர்களின் குடும்பங்களை பார்க்காத ஸ்டாலின்.. இங்கு மட்டும் ஏன் சென்றார். அமைச்சர்கள் அங்கு செல்லாத போது இங்கு மட்டும் அமைச்சர்கள் செல்வது ஏன்?
விஜய்க்கு தந்த ஆதரவு எல்லாம் வேஸ்ட்
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என்பது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். விஜயின் பிரச்சாரம் கரூருக்கு முன்பு நான்கு மாவட்டங்களில் நடைபெற்றது. அக்கூட்டங்களில் திரண்ட மக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு ஒரு தகவலைக் கொடுத்திருக்கும்.
அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்காது. போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அதே பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது., என்று கேள்வி எழுப்பினார்.
இப்படி கடுமையாக விஜய்க்கு அதிமுக கொடுத்த ஆதரவு எல்லாம் தற்போது விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிவிட்டது என்று கூறப்படுகிறது. விஜயின் இந்த முடிவால் அதிமுகவினர் கடும் அப்செட் ஆகி உள்ளார்களாம். நேற்றே ஊடக விவாதங்களில் அதிமுகவினர் பலர் விஜயை கரூர் விவகாரத்தில் தாக்கி பேசி வருகின்றனர். கரூர் விவகாரத்தில் விஜய்க்கு பங்கு உண்டு என்பது போல் அதிமுகவினர் கடுமையாக தாக்கி பேச தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications