Tvk Vijay Protest: இப்படியா பண்ணுவாங்க.. இருந்த இடம் தெரியாமல் போன சென்டர் மீடியன்கள்.. இடமே மாறிப்போச்சே!
சென்னை: சென்னை வேதாந்தா சாலையில் இன்று அஜித் குமார் மரணம் வழக்கு மற்றும் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த 21 சம்பவங்களுக்கும் கண்டனம் தெரிவித்து விஜய் தலைமையில் தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் சாரி வேண்டாம், நீதி தான் வேண்டும் என்று தவெகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சுமார் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில் அந்த சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியங்களை அடித்து உடைத்துள்ளனர். போராட்டம் முடிந்த பிறகு நீண்ட தூரத்துக்கு சென்டர் மீடியன்கள் மற்றும் பேரி கார்டுகளும் உடைக்கப்பட்டு கிடந்தன.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கிய விஜய், தற்போது முழு நேர அரசியலில் இறங்கியிருக்கிறார். கட்சி கொடி, கட்சியின் கொள்கை, கட்சி பாடல், மாநாடு, மாவட்ட செயலாளர்கள் நியமனம், செயற்குழு கூட்டம் என அடுத்தடுத்து கட்சி பணிகளை செய்து வருகிறார் விஜய்.

விஜய் போராட்டம்
இதற்கிடையே தான் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞரை திருட்டு புகார் ஒன்றில் கைது செய்த போலீசார் அவரை விசாரிப்பதாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பூதாகரமான நிலையில் விஜய் இதனை பிடித்துக்கொண்டார். ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது பெனிஸ் ஜெயராஜ் லாக் அப் டெத் வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
அதேபோன்று தற்போது நடந்துள்ளதால் அஜித் குமார் குடும்பத்தினரையும் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஆகியோர் செல்போனில் ஆறுதல் தெரிவித்த நிலையில் விஜய் நேரில் சென்றது பரவலாக பேசப்பட்டது. இதேபோன்று கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 21 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ள சம்பவம் அறிந்த விஜய் அவர்களை பனையூர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
சாரி வேண்டாம், நீதி வேண்டும்
அதன்படி நேற்று காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த 18 பேரது குடும்பத்தினரையும் நேற்று பனையூர் அலுவலகத்தில் விஜய் சந்தித்தார். அப்போது அவர்கள் பேசுவதை கேட்ட விஜய் கண்கலங்கியுள்ளார். இதையடுத்து இன்று காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு தவெகவினர் போராட்டம் நடத்தினர். தலைவர் விஜய்யும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக இந்த போராட்டத்தில் பங்கேற்ப இருந்ததால், பல்வேறு இடங்களில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க தவெக தொண்டர்கள் வர தொடங்கினர். காலையிலேயே கூட்டம் அதிகளவு இருந்தது. தொடர்ந்து விஜய் வருவதற்கு முன்பே அங்கு பல ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்தனர். சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்ற பதாகைகளுடன் போராட்டம் செய்தனர்.
எதற்கு சிஎம் பதவி?
தொடர்ந்து போராட்டத்தில் பேசிய விஜய், அஜித் குமார் குடும்பத்தினரிடம் மட்டும் சாரி கேட்டால் போதாது.. காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் சாரி கேட்க வேண்டும்.. வெற்று விளம்பர மாடல் திமுக இப்போது ஸாரிம்மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது.. சாத்தான்குளம் சம்பவத்தை ஆணவம் என்றால் இதற்கு பெயர் என்ன சிஎம் சார்..
எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் சொன்ன பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதற்கு அரசாங்கம்.. எதற்கு சிஎம் பதவி? எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து பதில் வராது.. பதில் இருந்தால் தானே சொல்வீங்க.. அதிகபட்சமாக சாரி வேண்டும் என்றால் சொல்வீங்க.. என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
காணமல் போன சென்டர் மீடியன்கள்
தொடர்ந்து போராட்டம் முடிந்த பிறகு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலைந்து சென்றனர். அப்போது வேதானந்தா சாலையில் பல இடங்களில் கம்பிகள், பேரி கார்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. குறிப்பாக நடுவில் இருந்த சென்டர் மீடியன்கள் உடைந்து கிடந்தன. நீண்ட தூரத்துக்கு கம்பிகள் உடைக்கப்பட்டும், ஒரு சில இடங்களில் அந்த கம்பிகள் சாய்ந்தபடியும் கிடந்தன. இதனால் போராட்டத்துக்கு பிறகு அந்த இடமே மாறிப்போய் காட்சியளிக்கிறது.












Click it and Unblock the Notifications