புரட்சி பாரதம் கட்சியுடன் பேசிய விஜய்.. சிரித்துக்கொண்டே தவெக ஆபரை நிராகரித்த பூவை ஜெகன்மூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியை கொண்டு வரும் நோக்கில் பூவை ஜெகன்மூர்த்தியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது. அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறி பூவை ஜெகன்மூர்த்தி தவெகவின் ஆஃப்ரை நிராகரித்திருக்கிறார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்தே களமிறங்குவதாக அறிவித்துவிட்டார். இதனால் தவெக தலைமையில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

TVK Vijay

இதனிடையே செங்கோட்டையன் தரப்பில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து கூட்டணி அமையும் என்று கூறி வருகிறார். ஆனால் இதுவரை இரு தரப்பும் விஜய்யுடன் ஒருமுறை கூட சந்திப்பு நடத்தவில்லை.

அதேபோல் தவெக கூட்டணியில் ஒரு பட்டியலின கட்சியை கொண்டு வர வேண்டும் என்று விஜய் விரும்பி இருக்கிறார். ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் மட்டும் கூட்டணி அமைத்தால், அது விஜய் மீது ஒரு வகையான சமூக சாயம் பூசப்படும் என்று கணக்கு போட்டுள்ளனர். இதனால் தவெக நிர்வாகி அருண்ராஜ் மூலமாக புரட்சி பாரதம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது அருண்ராஜ் பேச்சுவார்த்தையை முடித்த போதே, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, அதிமுக கூட்டணியில் ஏற்கனவே எங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதனால் மேலும் எதுவும் பேச முடியாமல் அருண்ராஜ் அங்கிருந்து புறப்பட்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.

இதனால் தவெக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்று அக்கட்சியின் தொண்டர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் முதன்மை சாய்ஸாக என்டிஏ கூட்டணியே இருக்கிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே முட்டுக்கட்டையாக இருக்கிறார். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டால், சீமான் கதி தான் விஜய்க்கும் வரும் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+