TVK Vijay: மக்கள் சந்திப்புக்கு தடையா.. விஜய் அதிரடி முடிவு.. மார்ச் 12 தவெக செய்ய போகும் சம்பவம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தவெக தலைவர் விஜய் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்குதல் உள்ளிட்ட 3 விஷயங்களை கண்டித்து தவெக சார்பில் வருகிற மார்ச் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணி அமையாமல், ஜனநாயகன் படம் வெளியாகாமல், மனைவியுடனான பஞ்சாயத்து நீதிமன்றம் வரை சென்று விஜய் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

தேர்தலுக்காக மற்ற கட்சிகள் புயல் வேகத்தில் வியூகங்களை அமைத்து களத்தில் பம்பரம் போல சுழன்று கொண்டிருக்கிறார்கள். தவெக தலைவர் விஜய் இப்போதும் அரிதிலும் அரிதாக்கத்தான் வெளியில் தலை காட்டி வருகிறார். அரசியலுக்கே கால்ஷீட் கொடுத்து விஜய் இயங்குவதாக அவர் மீது அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் வைத்து வருகிறார்கள். [TVK Vijay]
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தோழர்களுக்கு வணக்கம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.
அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்கிற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.
இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வருகிற 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications