தவெகவை முடக்க முயற்சிக்கிறார்கள்.. கரூர் செல்ல அனுமதிக்கவில்லை.. சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சிகள் நடப்பதாக அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கரூர் செல்ல தவெகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறிய சிடிஆர் நிர்மல் குமார், விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின் தவெக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. மாமல்லபுரத்தில் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விஜய் சந்தித்து ஆறுதல் கூறி இருந்தார். இதன்பின் விஜய் வழக்கம் போல் அறிக்கைகளை வெளியிட, தொடர்ந்து தவெகவை ஒருங்கிணைக்க நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது.

இதன் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று காலை தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விஜய் இல்லாமல் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தவெகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. குறிப்பாக விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம், தவெகவின் சின்னம், வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், முதல் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பணிகள், அடுத்த நிகழ்வுகள் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த வாரமே உயர்நீதிமன்றத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்காகவே இன்னும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படாமல் இருக்கிறது.
எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தோம். இதன்பின் 10 நாட்களுக்குள் வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்க அறிவுறுத்தி இருக்கிறது. அதன் வெளி வந்த பின் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எங்களுக்கான தடைகள், பிரச்சனைகள் என்னென்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
கரூர் சம்பவத்திற்கு அடுத்த நாளிலேயே நாங்கள் மீண்டும் கரூர் செல்ல முயற்சித்தோம். இரவு 3.30 மணி வரை காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதன்பின் அனைத்து சாலைகளும் தடை செய்யப்பட்டது. தவெக கொடி கட்டிய வாகனங்களை போலீசார் கரூர் மாவட்டத்திற்குள் அனுமதிக்கவில்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் அடித்து வெளியேற்றப்பட்டார்கள்.
அதன்பின் நடந்த நாடகத்தை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அமைச்சர்கள் நடத்திய நாடகத்தை பார்த்திருப்பீர்கள்.. உடனடியாக பிரேத பரிசோதனை செய்துவிட்டார்கள் என்று தெரிந்த பின், எங்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. ஏனென்றால் எங்களின் முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீதுதான். அதனால் உடனடியாக நீதிமன்றத்தை நாடினோம்.
தவெகவை முடக்க வேண்டும் என்று நினைத்தார்கள். மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எங்களுக்கு 41 பேர் பலியானது மட்டுமே ஒரே துக்கம். மீள முடியாத துக்கம். எங்களுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது. தவெகவில் யாரிடமும் தொய்வு ஏற்படவில்லை. இதனைவிட பெரிய நெருக்கடியையும் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு












Click it and Unblock the Notifications