நான்தான் உத்தரவிடுவேன்.. முதல்முறையா விஜயே சொல்லிட்டாரு! புஸ்ஸி ஆனந்த் கையை விட்டு போன தவெக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேற்று கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை ஒன்று பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு கட்சியில் மதிப்பு குறைகிறதோ என்ற கேள்விகள் இதனால் எழுந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, கட்சியின் பணிகளை சரி செய்ய கீழ்காணும் புதிய குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கைதான் விவாதங்களை சந்தித்துள்ளது.

TVK Vijay

1. N.ஆனந்த் பொதுச்செயலாளர்
2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
3. Dr. K.G. அருண்ராஜ் ExBUS கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
4. CTIL நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர்
5. A.ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்
6.விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்
7. A.ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
8. M.அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்
9. M.சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்
10. A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
11. R.விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
12. M.சிவன் மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்
13.. M.பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்
14. V.சம்பத்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
15. M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்
16. S.R.தங்கப்பாண்டி மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
17. K.அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
18. B. ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்
19. J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
20. A.விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
21. R. பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
22. V.P.மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்
23. N.சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்
24. K. விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்
25. M.வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்
26. S.ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
27. S. பாலசுப்பிரமணியன் கழக உறுப்பினர் தூத்துக்குடி
28. டாக்டர். N. மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம், இது தொடர்பாக வெளியான அறிக்கைதான் விவாதங்களை சந்தித்துள்ளது.

விஜய் நேரடியாக வெளியிட்ட அறிக்கை

நேற்று கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட இந்த அறிக்கைதான் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இதற்கு முன் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் , மேற்கண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படுபவர்கள் அனைவரும் எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கிணங்க, கழகப் பொதுச்செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி கழகப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும்,

கழக மருத்துவர் அணியின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள், கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு
மற்றும் ஆலோசனையின்படி, கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகப் பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்., என்று கூறப்பட்டது.

ஆனால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கேட்டுக்கொள்கிறேன். வழங்குமாறு விஜய் நேரடியாக கேட்டுக்கொண்டுள்ளார்.

நேரடியாக விஜயின் உத்தரவின் பெயரில் முடிவுகள் எடுக்கப்படுவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. முதல்முறையாக விஜய் சார்பில் இப்படி ஒரு அறிக்கை தவெக வெளியாகி உள்ளது. இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு கட்சியில் மதிப்பு குறைகிறதோ என்ற கேள்விகள் இதனால் எழுந்துள்ளன.

விஜய் சந்திப்பு - ஓரம்கட்டப்பட்ட புஸ்ஸி ஆனந்த்

கடந்த மாதம் கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் தங்கள் உறவினர்களை இழந்த ஒரு குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று முதல்நாள் சந்தித்தார். சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்துப் பேசினார்.

நேற்று முதல்நாள் இந்த நிகழ்வு முழுக்க புஸ்ஸி ஆனந்த் ஓரம் கட்டப்பட்டார். அவருக்கு எங்குமே இடம் கொடுக்கப்படவில்லை. புஸ்ஸி ஆனந்த் மொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தார். விஜய் புஸ்ஸி ஆனந்த் மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதை விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அதோடு கட்சியை சரியாக கட்டமைக்கவில்லை. கட்சி நிர்வாகிகளை சரியாக தேர்வு செய்யவில்லை. கட்டமைப்பில் விஜய் சொதப்பிவிட்டார் என்றெல்லாம் புஸ்ஸி ஆனந்த் மீது விஜய் கோபத்தில் இருக்கிறாராம். இதன் காரணமாக நேற்று முதல்நாள் நிகழ்வில் புஸ்ஸி ஆனந்த் உடன் விஜய் சரியாக பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்போதும் அறிக்கையும் விஜய் உத்தரவின் பெயரில் வந்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+