அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக, பாஜக இரண்டுமே நேரடியாக தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

முதல் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வரும் த.வெ.க தலைவர் விஜய், இப்போது அடுத்த கியருக்கு வண்டியை மாற்றியிருக்கிறார். கட்சி மாநாடு, உறுப்பினர் சேர்க்கை என அதிரடி காட்டியவர், இப்போது 'வேட்பாளர்' அவதாரத்திற்கான அஸ்திவாரத்தைப் பலமாகப் போடத் தொடங்கிவிட்டார்.

tvk perambur

விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் களம் காண்பார் என்பதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். தென் மாவட்டமா அல்லது கொங்கு மண்டலமா எனப் பல யூகங்கள் இறக்கை கட்டிய நிலையில், இப்போது விஜய்யின் பார்வை 'சென்னை' பக்கம் திரும்பியிருக்கிறது. குறிப்பாக, வடசென்னை பகுதியான பெரம்பூர் தொகுதிதான் விஜய்யின் 'சாய்ஸ்' என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பேச்சு பலமாக எழுந்துள்ளது. அவர் பெரம்பூரில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

விஜயை எதிர்க்கும் பாமக

இந்த நிலையில்தான் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக, பாஜக இரண்டுமே நேரடியாக விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இங்கே பாமக போட்டியிடுகிறது.

அதன்படி தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், திருப்போரூர் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. மேலும், ஜெயங்கொண்டம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, உத்திரமேரூர் தொகுதிகளிலும் பாமக போட்டியிடுகிறது. இது தவிர போரூர், செஞ்சி, விருத்தாசலம், பெரம்பூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை, அம்பத்தூர், சேலம் மேற்கு என மொத்தம் 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. பெரம்பூரில் விஜய் போட்டியிடுவதாக கூறப்படும் நிலையில் அங்கே பாஜக, அதிமுக போட்டியிடாமல் கூட்டணியில் உள்ள அங்கே வலுவாக இல்லாத பாமக போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளில் எது என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு

மயிலாப்பூர்
தளி
மொடக்குறிச்சி
உதகை
அவிநாசி
திருப்பூர் தெற்கு
கோவை வடக்கு
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை
திருப்பத்தூர்
மதுரை தெற்கு
சாத்தூர்
திருச்செந்தூர்
வாசுதேவநல்லூர்
ராதாபுரம்
நாகர்கோவில்
விளவங்கோடு
ஆவடி
திருவண்ணாமலை
தஞ்சாவூர்
திருவாரூர்
அறந்தாங்கி
ராசிபுரம்
ராமநாதபுரம்
பத்மநாபபுரம்
மானாமதுரை
குளச்சல்
-ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் என்னென்ன?

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:-

* தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டசபை தொகுதி

* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி

* தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு

* சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

* வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்

* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம்

* திருச்சி மேற்கு

* சென்னையில் சைதாப்பேட்டை

* சென்னை பூந்தமல்லி

* திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+