கூட்டணி கன்பார்ம்ங்க.. ஆனால் ஜனநாயகன் வரவரைக்கும்.. வெளியே சொல்லாதீங்க? மெசேஜ் போட்ட விஜய்?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது புதிய படமான 'ஜனநாயகன்' வெளியாகும் வரை கட்சியின் கூட்டணிக் கொள்கை குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி முடிவுகள் படத்தின் வசூலைப் பாதிக்கக் கூடாது என்பதே இந்த முடிவுக்குப் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் அல்லது பாஜக என எந்தக் கட்சியுடனான கூட்டணியாக இருந்தாலும், அது குறித்த அறிவிப்பை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
விஜய் தற்போது தனது சினிமா பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால், 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த விபத்து நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் மகாபலிபுரத்தில் சந்திப்பு நடத்தினார்.
இந்தச் சந்திப்பு ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றதாகவும், ஊடகங்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுக்காக 50 அறைகளை விஜய் தனது கட்சி சார்பாக முன்பதிவு செய்திருந்தார்.
விஜய் ப்ரோமோஷன்
சந்திப்பின்போது, விஜய் ஒவ்வொரு குடும்பத்தினருடனும் தனிப்பட்ட முறையில் பேசி தனது இரங்கலைத் தெரிவித்தார். அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு, விஜய் மீண்டும் 'ஜனநாயகன்' பட விளம்பரப் பணிகளில் ஈடுபடத் தயாராகி வருகிறார்.
இந்த 'ஜனநாயகன்' திரைப்படம், விஜயின் சினிமா வாழ்க்கையிலும், அரசியல் பயணத்திலும் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே அவரது கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
'ஜனநாயகன்' திரைப்படம்
திரையுலக வட்டாரங்களின்படி, 'ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் நவம்பர் மாதத் தொடக்கத்தில் வெளியாகும் என்றும், அதைத் தொடர்ந்து டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி குறித்த எந்த அறிவிப்பும் 'ஜனநாயகன்' படத்தின் வசூலைப் பாதிக்கக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். அதனாலேயே காங்கிரஸ் அல்லது பாஜக என எந்தக் கட்சியுடனான கூட்டணியாக இருந்தாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் அறிவிப்பை வெளியிடும் முடிவில் உள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பிறகும் சினிமாவில் நடித்து வருவதைச் சுட்டிக்காட்டி, விஜயும் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பவன் கல்யாண் தனது அடுத்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடும் நிலையில், விஜயும் இதேபோல தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது பங்களிப்பைத் தர வேண்டும் என்றும், அவரது ஓய்வு தமிழ் திரையுலகிற்குப் பெரும் இழப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications