அருள் விக்னேஷிடம் விஜய் அனல் கக்கினார்! அக்னி குழம்பை அள்ளி ஊற்றினாரு சொல்றாங்க! ஆனால்.. உதயநிதி
சென்னை: கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தகாத மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை இந்த டம்மி முதல்வர் விஜய் பாதுகாப்பது ஏன்? என தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?

கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக் கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும். இவ்வாறு உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக சமூகவலைதளங்களில் தகவல் கிடைத்தது. இதையடுத்து திமுக எம்பி கனிமொழி இந்த தகவலை முதன்முதலில் வெளியே கொண்டு வந்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தவெக ஆட்சியில் சாமானிய பெண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை என்றால், மாவட்ட ஆட்சியருக்குமா இதே நிலை என கேள்விகள் எழுந்தன.
அருள் விக்னேஷ் மீது புகார்
மேலும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக, திமுக ஆகியவை புகார் கொடுத்துள்ளன. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் வந்ததும் போல் ஒரு சம்பவமே நடக்கவில்லை என அருள் விக்னேஷ் என்று அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: நான் அதிகாரிகள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்திருக்கிறேன். என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்த நபர்கள் சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பி வருகிறார்கள். எங்களது ஆட்சியையும் என்னையும் குறை கூறும் நோக்கில் அவதூறு பரப்புகிறார்கள்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு
முதல்வர் விஜய் சொல்வது போல் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல தேவையில்லை. சமூகவலைதளங்களில் பரவி வருவது போல் நான் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்ந்ததில்லை. மக்கள் அளிக்கும் மனு தொடர்பான தகவல்கள் மட்டுமே ஆட்சியரிடம் பரிமாறி இருக்கிறேன்.
பொய்யான தகவல்
என் மீது பொய்யான தகவலை பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். எனினும் இதுவரை கள்ளக்குறிச்சி ஆட்சியர் அவ்வாறு மெசேஜ் வந்ததா, வரவில்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. இந்த நிலையில் அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு தீபாவளி பரிசை கொடுத்தனுப்புவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.




Click it and Unblock the Notifications
