"எல்லாம் டைம் வேஸ்ட்.." ஈரானுடன் டீல் எதுவுமே வேண்டாம்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானுடன் இனி எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வந்த துணை அதிபர் ஜேடி வான்ஸிடம் ஈரான் விவகாரத்தில் இனி கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்களில் நிலவும் ஊழல் விவகாரங்களில் முழு கவனம் செலுத்துமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா ஈரான் இடையே நேரடி தாக்குதல் இல்லை என்றாலும் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து நிலவி வந்தது. ஈரான் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வந்தது. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்த விவகாரத்தில் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டார்.

Trump on Iran War Donald Trump iran US

போர் நிறுத்தம் தேவையில்லை

ஈரான் விவகாரத்தில் இனி போர் நிறுத்த ஒப்பந்தம் தேவையில்லை என்றும் அதில் டைம் வேஸ்ட் செய்ய வேண்டாம் என்றும் துணை அதிபர் வேன்ஸுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வான்ஸ் திட்டமிட்டு வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட மறுநாளே டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரான் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நேரில் சந்தித்து அமைதிக்கான வழியை ஆராய வான்ஸ் பரிசீலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளையும் நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.

டிரம்ப்

இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரானுடன் எங்களுக்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை. டீல் தேவைப்பட்ட காலம் எல்லாம் முன்பே முடிந்துவிட்டன. அவர்களுடைய பல நூறு பில்லியன் டாலர் பணம் எங்களிடம் இருக்கிறது; அவர்களுடைய ஹார்முஸ் ஜலசந்தியும் எங்கள் கையில் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் துறைமுகங்களை நோக்கிய அமெரிக்க கடற்படை முற்றுகையும், பொருளாதார தடைகளும் பலனளிப்பதாக டிரம்ப் அரசு கருதுகிறது. இதனால் கூடுதல் ராணுவ நடவடிக்கையோ புதிய பேச்சுவார்த்தையோ தேவையில்லை என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளதாகத் தெரிகிறது

வான்ஸ்

கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடங்கிய போர் தொடர்பாக வான்ஸ் ஆரம்பம் முதலே கேள்வி எழுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை முயற்சிகளில் அவர் முக்கிய பங்காற்றினார்.

ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய வான்ஸ், ஜூன் மாதத்தில் சண்டையை நிறுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக உதவினார். ஆனால், சில வாரங்களிலேயே அந்த முயற்சி தோல்வியடைந்தது. கடந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வான்ஸ் கடிதம் அனுப்பியதாக ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இருப்பினும், அத்தகைய முயற்சிக்கு தான் உத்தரவிடவில்லை என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

தேர்தல் தோல்வி?

அமெரிக்க இடைக்கால தேர்தலில் குடியரசுக் கட்சி மோசமான முடிவுகளை சந்தித்த நிலையில், அதற்கு ஈரான் போரே முக்கிய காரணம் என்பதை வான்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார். 2028 அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளராக பார்க்கப்படும் வான்ஸ், போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். இதன் மூலம் 2028 அதிபர் தேர்தலிலும் அவருக்கு மைலேஜ் கிடைக்கும்.

இந்த சூழலில் மினசோட்டா, கலிபோர்னியா, இல்லினாய்ஸ் உள்ளிட்ட ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்களில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய டிரம்ப், அதை விசாரிப்பதில் வான்ஸ் முழு கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அங்கு ஒவ்வொரு மாதமும் பல பில்லியன் டாலர்கள் திருடப்படுவதாகவும், அவற்றை மீட்டால் அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+