தவெக வேட்பாளர்களுக்கு பறந்த அவசர அழைப்பு.. விஜய் முடிவால் சென்னைக்கு படையெடுப்பு!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். கணிசமான வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்ப்போம் என்று தவெக நம்புகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தவெக வேட்பாளர்களை நாளை மறுநாள் சென்னை வரசொல்லி விஜய் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். தவெக வருகை இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக வேட்பாளர்களுக்கு அழைப்பு
மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் வாக்கு எண்ணும் பணிக்கு தயாராகி வருகிறார்கள். நாளை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பான எக்ஸிட் போல் வெளியாகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை வெளியாகின்றன.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தங்களது வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதி விஜய், தங்கள் கட்சி வேட்பாளர்களை சென்னையில் வைத்து சந்தித்து பேசவுள்ளார். இதற்காக விஜய் நீங்கலாக 232 வேட்பாளர்களுக்கும் (231 தவெக வேட்பாளர்கள் + எடப்பாடி தொகுதி தவெக ஆதரவு சுயேச்சை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆலோசனை
இவர்கள் அனைவரும் நாளை மறுநாள் சென்னையில் விஜயை சந்தித்து பேசவுள்ளனர். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், "பனையூர் தவெக அலுவலகம் அல்லது சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெறலாம். ஏற்கனவே மண்டல வாரியாக எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதை விஜய் சீனியர் நிர்வாகிகளுடன் ஆய்வு செய்திருந்தார்.
பின்னடைவாக உள்ள இடங்கள், சவால்கள் குறித்தும் விஜய் ஆலோசித்திருந்தார். திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று வழிபட்டு விஜய் சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் வேட்பாளர்களை சந்திக்கவுள்ளார். தொகுதி நிலவரங்களை ஆய்வு செய்யும் விஜய், வாக்கு எண்ணிக்கையின்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளார்". என்றனர்.
-
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications