சிபிஐ சம்மனை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த விஜய்.. அதிரடி முடிவால் ஷாக்கான டெல்லி
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விஜய் நாளை நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு நாளை விஜய் டெல்லி செல்வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபி அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு 2 முறை சிபிஐ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 12, 19 ஆம் தேதி டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராகினார். அவரிடம் தொடர்ந்து பல மணி நேர விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தவெக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் விஜய் நாளை நேர்காணல் நடத்தவிருந்த நிலையில், நாளை டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், நாளை திட்டமிட்டபடி விஜய்
நேர்காணல் நடத்தவுள்ளதாகவும், கரூர் துயர சிபிஐ விசாரணைக்கு நாளை டெல்லி செல்வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் நாளை விஜய் நேர்காணல் நடத்தவுள்ளதாகவும், முதல்கட்டமாக 25 பேரிடம் விஜய் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications