சென்னையில் 33% வாக்கை தவெக கைப்பற்றும்.. அதிமுக டெபாசிட் வாங்காது.. சொல்கிறார் பத்திரிகையாளர் இதயா!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து 5 நாட்களாகிவிட்டது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த முறை பதிவான வாக்குகளை விடவும், இம்முறை கூடுதலாக சுமார் 23 லட்சம் வாக்குகள் வரை பதிவாகி இருக்கிறது. இதனால் விஜய்க்கு ஆதரவான அலை வீசுவதாக பலரும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் இதயா அளித்துள்ள நேர்காணலில், இந்த தேர்தலை போல் எந்தத் தேர்தலையும் பார்த்ததே இல்லை என்று ஒவ்வொரு ஆண்டும் சொல்வார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதும் சொன்னார்கள். அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்த போதும் பேசினார்கள். மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்ட போதும் பேசினர்கள்.

கமல் கட்சி தொடங்கிய போதும் சொன்னார்கள். அப்படிதான் இம்முறை கணிக்க முடியாத தேர்தல் என்று கூறுகிறார்கள். விஜய்க்கு 25% வாக்குகள் கிடைக்கும் என்று சொன்ன போது கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று பலரும் விஜய்க்கு 20% வாக்குகள் வரை கொடுக்க தொடங்கிவிட்டார்கள். தற்போது சென்னை மண்டலத்தில் 33% வாக்குகளை விஜய் பெறுவார். திமுக 40% வாக்குகளையும், அதிமுக சில தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.
சென்னையில் ஒரு சில தொகுதிகளில் தவெக வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. சட்டசபையில் தவெக உறுப்பினர் நிச்சயம் இருப்பார். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், 38% வாக்குகளை எடுக்க வேண்டும். சென்னையை தவிர்த்து வேறு எந்த மாவட்டத்திலும் தவெக 30% வாக்குகளை தாண்டாது.
எனக்கு தெரிந்தவரை செங்கோட்டையன் வெல்ல வாய்ப்புள்ளது. காரைக்குடியில் பிரபுவுக்கு ஒரு சான்ஸ் இருக்கிறது. ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு எளிதாக இருக்காது. பெரம்பூரில் விஜய் வென்றுவிடுவார். திருச்சி கிழக்கில் விஜய் தோற்கவும் வாய்ப்புள்ளது. விஜய் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர். சென்னையில் திரையரங்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகம்.
பல குடும்பங்களில் குழந்தைகள் விஜய்க்கு வாக்கு சேகரித்துள்ளனர். அதன் தாக்கம் களத்தில் கொஞ்சம் நடந்திருக்கிறது. விஜய் பக்கம் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை குறைவாக இருக்கிறது. ஜெயலலிதாவிடம் இருந்த கரீஷ்மா எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. அதனால் திமுகவை எதிர்க்க வலுவான நபராக விஜய்யை பலரும் பார்க்கிறார்கள்.
அதிமுகவுக்கு சாதகமான வாக்குகள் மட்டுமல்லாமல், சிறுபான்மை சமூக மக்களும் விஜய்க்கு வாக்களித்துள்ளனர். பாஜக வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டால், திமுக மட்டுமே சாய்ஸாக இருந்தது. ஆனல இப்போது விஜய் ஒரு முக்கிய சாய்ஸாக இருக்கிறார். விஜய் கெஞ்சியும் கூட யாரும் கூட்டணிக்கு வரவில்லை. அதற்கு விஜய் களத்தில் செயல்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்கப்போகிறாரா தாடி பாலாஜி.. லட்சிய ஜனநாயக கட்சியிலிருந்து விலகல் -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications