அம்பேத்கர் நினைவு நாள்.. வழக்கம்போல் பனையூரில் இருந்தே மரியாதை செலுத்திய விஜய்!
சென்னை: அண்ணல் அம்பேத்கரின் 70வது நினைவு தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார். வழக்கம் போல் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அம்பேத்கர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். இது மீண்டும் விமர்சனத்தை பெற்று வருகிறது.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 70வது நினைவு தினத்தையொட்டி பலரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தி வருகின்றன. அந்த வகையில் தவெகவின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அம்பேத்கர் அறிவிக்கப்பட்டார்.

இதனால் தவெக தலைவர் விஜய் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திலேயே அம்பேத்கர் புகைப்படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தி இருக்கிறார். தொடர்ந்து அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கு அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர்.
நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு மரியாதை செலுத்திய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அம்பேத்கர் சிலைக்கு விஜய் நேரில் வந்து மரியாதை செலுத்தாதது அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் விஜய் இப்போதும் வொர்க் ஃபிரம் ஹோம் அரசியலிலேயே ஈடுபட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications